உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கட்சியின் அழிவுக்கு காரணமாவர்!

கட்சியின் அழிவுக்கு காரணமாவர்!

என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே நடக்கும் வார்த்தை போர், தற்போது உச்ச கட்டத்தை எட்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.'அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி, அரைவேக்காடு, மின்மினி பூச்சி, விட்டில் பூச்சி' என்று, தரம் தாழ்ந்து அ.தி.மு.க.,வினர் விமர்சிக்கின்றனர். இப்படி விமர்சனம் செய்தால், யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்? அதனால் தான், 'என்னை தரக்குறைவாக விமர்சனம் செய்தால், அதே பாணியில் தக்க பதிலடி கொடுப்பேன்' என்று அண்ணாமலை சொல்லியதும் நியாயமாகத் தானே தெரிகிறது? எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் இடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கருணாநிதியை, 'கலைஞர்' என்று தான் எம்.ஜி.ஆர்., அழைத்தார்.எம்.ஜி.ஆர்., கடைப்பிடித்த அந்த அரசியல் நாகரிகம், பண்பாடு, 'மாஜி' அமைச்சர்களான ஜெயகுமார், செல்லுார்ராஜு போன்ற அ.தி.மு.க.,வின்இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இல்லையே? தி.மு.க.,வினர் கூட அண்ணாமலையை இப்படி விமர்சனம் செய்ததில்லை. அண்ணாமலை உருவ பொம்மையை எரிப்பதாலோ, அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவதாலோ, அவரின் புகழையும், பெருமையையும் குறைக்க முடியாது.வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக பா.ஜ., அதிக ஓட்டுகள் பெற்று, எதிர்க்கட்சியாகி, அ.தி.மு.க.,வை மூன்றாவது இடத்திற்கு தள்ளினாலும் ஆச்சரியம் இல்லை.ஏனெனில், தவளை தன் வாயால் கெட்டது போல, இத்தகைய தரக்குறைவான விமர்சனங்களை கூறுபவர்களே, அக்கட்சியின் அழிவுக்கு காரணமாக இருக்கப் போகின்றனர் என்பது நிதர்சனம்.

உயர் க ல்வி மோசடியில் கட்சிகள் மவுன ம் ஏன்?

அ.குணா, கடலுாரில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 1990களில் தனியார் பொறியியல் கல்லுாரிகள் புற்றீசல்களைப் போன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் துவக்கப்பட்டன. இதற்கு மூல காரணம், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., காலத்தில், அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற சிலர் என்று சொன்னால் அது மிகையாகாது.இதை பார்த்து, அரசியலில் ஊழல் வாயிலாக சம்பாதித்த பலரும், பல பொறியியல் கல்லுாரி களை துவங்கினர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, பல மடங்கு பணத்தை மாணவர்களிடம் வசூலித்து, மெகா கோடீஸ்வரர்களாக மாறினர்.இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 1990, 2000 காலகட்டத்தில் பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு அதீத ஊதியம் கிடைத்ததால், பெற்றோர் கடன் வாங்கியாவது பொறியியல் கல்லுாரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டினர்; அந்த ஆர்வம் தான், பொறியியல் கல்லுாரி நடத்துபவர்கள், அதிக பணம் பெற்று கொள்ளை அடிக்க அச்சாணியாய் அமைந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, பொறியியல் பட்டதாரிகளை சில ஆயிரம் ஊதியத்திற்கு கூட எந்த நிறுவனமும் வேலைக்கு அமர்த்துவதில்லை; இதனால், பல பொறியியல் கல்லுாரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. 2023 - 24 கல்வியாண்டில், 224 தனியார் கல்லுாரிகளில் அங்கீகாரம்பெற்ற, 353 பேராசிரியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பல்வேறு முறைகேடுகள் செய்து, ஒரே நேரத்தில் பல கல்லுாரிகளில் பணிபுரிந்ததாக குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. சில பேராசிரியர்கள், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, கிட்டத்தட்ட, 200க்கும் மேற்பட்ட கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை, நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இத்தகைய மோசடியில் ஈடுபட்ட பொறியியல் கல்லுாரிகளுக்கெல்லாம், உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன் நிச்சயம், 'இணக்கமான' உறவு இருந்திருக்கும். இந்த மோசடியை எந்த அரசியல் கட்சியும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், மோசடியில் ஈடுபட்ட பெரும்பாலான கல்லுாரிகளின் உரிமையாளர்கள்அரசியல் கட்சியினர் என்பது தான் காரணம்.

வி யப் பொன்றும் இ ல்லை!

எஸ்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: லடாக் யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும், லடாக்கில் வசிக்கும் அடித்தட்டு மக்களை எளிதில் சென்று சேரும் என, அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஒத்துழைப்பால், வளர்ச்சி பாதையில், லடாக் நடை போட துவங்கியுள்ளது. முந்தைய ஜம்மு- - காஷ்மீரின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக, பிரதமர் வளர்ச்சி தொகுப்பில் இருந்து, 80,668 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேலும் 2020- - 21 முதல் 2023- - 24 வரை, ஆண்டுக்கு தலா, 5,958 கோடி ரூபாய், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.'அப்படி எல்லாம் ஒரு மாநில மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசித்து, ஒரு யூனியன் பிரதேசம் முன்னேற்றம் அடைய விட்டு விடுவோமா? அந்த முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, ஜம்மு -- காஷ்மீர் வாழ் மக்கள் சுதந்திரக் காற்றை தடுத்து நிறுத்துவதற்குத் தானே நாங்கள் பிறவி எடுத்து இருக்கிறோம்' என்பதுபோல் அறைகூவி இருக்கிறார், மக்கள் ஜனநாயக கட்சி தலைவி மெஹபூபா முப்தி.'ஜம்மு- - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்தது. அதை திரும்ப அளிக்க வேண்டும்என்பது தான், எங்கள் கட்சியின் கொள்கை. இதை காங்கிரசும் ஏற்றுக்கொண்டால், அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயார்' என்கிறார் மெஹபூபா முப்தி.இவர் மற்றும் இவர் போன்றவர்களது நோக்கம்என்னவென்று புரிகிறதா?'ஜம்மு- - காஷ்மீர் மக்கள்என்றென்றும் நாங்கள் அடிக்கும் தாளத்திற்கேற்ப நடனமாடிக்கொண்டு, எங்களுக்கு சேவகம் செய்து, எங்களுக்கு அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும்' என்பதை எப்படி தைரியமாக அறிவித்திருக்கிறார் பாருங்கள்.மத்தியில், 50 ஆண்டு காலம் கோலோச்சிய காங்கிரஸ் கட்சி, ஜம்மு -- காஷ்மீர் மக்களை, தாங்கள் கைகாட்டும் 'பெரிய தலை'களுக்கு அடிமைகளாக தானே வைத்திருந்தது?நாட்டை முன்னேற விடாமல் தடுத்து, நாட்டு மக்களை எப்போதும்,சுதந்திரக் காற்றை சுவாசிக்கமுடியாமல் அடிமைகளைப் போலவே வைத்திருக்க முனையும் இரண்டு அரசியல் கட்சிகள், ஒன்றோடு ஒன்று கூட்டணி அமைத்து கொள்வதில்வியப்பொன்றும் இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S.L.Narasimman
செப் 02, 2024 13:17

கருநாநிதியை புரட்சிதலைவர் எப்போதும் தீயசக்தின்னுதான் அழைத்தார்.


Kadaparai Mani
ஆக 30, 2024 18:08

பாஜக ஆதரவாளர் திமுக ஆட்சிக்குவர வேண்டும் என்று விரும்புகிறார் .இதைத்தான் அதிமுகவினர் புரிந்து கொண்டு விழிப்புடன் வேக பணி ஆற்றிவருகின்றனர் .அதிமுக மீண்டும் ஆட்சிக்குவரும் 2026ஆம் வருடம் .அண்ணாமலை எடப்படியார் பற்றி மூன்றாம் தர கருத்து கூறியது தவறு


D.Ambujavalli
ஆக 30, 2024 17:14

இப்படித் தரம் கெட்டு உளறும் 'தவளையை' அடக்கி வைக்க திராணியில்லாத தலைவர், ஒருவேளை அவரே பின்னணியில் இருந்து இதை ஊக்குவிக்கிறாரோ என்று எண்ண வைக்கிறது


Nallavan
ஆக 30, 2024 15:46

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக பா.ஜ., அதிக ஓட்டுகள் பெற்று, எதிர்க்கட்சியாகி,.... இப்படி உசுப்பேத்தியே கைப்புள்ளய ரணகளமாக்கி லண்டன் அனுப்பிட்டீங்க ..


karutthu
ஆக 30, 2024 09:32

இவர் திமுக வின் பீ டீம் மாதிரி செயல்படுகிறார் இவருக்கும் நான்காம்தர பேச்சளார் தி மு க வின் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு என்ன வித்தியாசம் .இவருக்கு நாவடக்கம் தேவை இதை பி ஜே பி தலைவர்கள் புரிந்து கொண்டு கண்டிக்கவேண்டும் .எனக்கு பி ஜே பி மேல் வருத்தமளிக்கிறது


VENKATASUBRAMANIAN
ஆக 30, 2024 08:41

அதிமுகவின் அழிவு அவர்கள் கையில்தான் உள்ளது. இதை நிரூபிக்கிறார் கள்.


ramani
ஆக 30, 2024 06:58

விஞ்ஞானி ராஜூ அண்ணாமலை பற்றி கேவலமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்ற செய்தி பார்த்து வெட்கபட்டேன். இப்படியெல்லாம் ஒரு மாஜி மந்திரி நடந்து கொள்ளலாமா என்று.. இவன் இனி எக்காலத்திலும் மாஜி தான். இவனுக்கும் சரி இவன் கட்சிக்கும் சரி இனி எக்காலத்திலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிகிறது. அதிமுக இனி நான்காவது இடத்திற்கு தள்ள படும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை