உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்!

நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்!

ஆர்.நிலவன், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தெற்கே, குமரி முனையில் இருந்து, வடக்கே திருத்தணி வரை உள்ள நிலப்பரப்பே, 'தமிழகம்' என்று, இதுவரை நம்பிக்கொண்டிருந்தோம்.ஆனால், 'அப்படியெல்லாம் இல்லை... மதுரை மாவட்டத்திலுள்ள, மேலுார் பகுதி மட்டும் தான், தமிழகம்' என்று முதல்வர் ஸ்டாலின் வரையறை செய்திருப்பதாக, தமிழக கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெளிவுபடுத்தி உள்ளார். மதுரை, மேலுார் பகுதியில், டங்க்ஸ்டன்சுரங்கம் அமைக்க, ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாம்.தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், அப்பகுதி விவசாயிகள், இதை எதிர்த்து போராட்டம் நடத்தினராம். அதனால், 'மேலுார் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய, எந்த சுரங்க பணிகளுக்கும், தமிழக அரசு எப்போதும் அனுமதி அளிக்காது' என, முதல்வர்உறுதி அளித்துள்ளதாக, அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். துாத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குஅனுமதி வழங்கியதும் கழக அரசு தான்;பின், அதை எதிர்த்து போராட்டம் நடத்தியதும் கழக அரசு தான். அந்த ஆலையை மூட நடந்த போராட்டத்தின் போது, 13 அப்பாவிகள் உயிர் இழந்ததுடன், ஆலையும் இழுத்து மூடப்பட்டது.அங்கு பணிபுரிந்த பல்லாயிரக் கணக்கானதொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதுகுறித்து, கழகம் உட்பட, எந்த அரசியல் கட்சியும் கவலைப்பட்டதாகதெரியவில்லை.தற்போது, அந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை, 'ஜாம் ஜாம்' என்று குஜராத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.'டங்க்ஸ்டன் சுரங்கம் அமைந்தால், மேலுார் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்' என, நீலிக்கண்ணீர் வடிக்கும்திராவிட மாடல் அரசு, மாநிலம் முழுதும் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகளைதிறந்து வைத்து, அன்றாட கூலித் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும், உடல் நலனையும், உயிர்களையும் குறித்து கொஞ்சமும் கவலையே படாமல், ஜாம் ஜாம் என்று கல்லா கட்டி கொண்டிருக்கிறதே...இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா அல்லது இவர்கள் வாழ்வாதாரம்காக்கப்பட வேண்டியது இல்லையா? 

சமரசம் தேவையா?

பா.பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து எழுதுகிறார்: தமிழகத்திற்கு என்றுஒரு தனிச்சிறப்பு உள்ளது;அது, ஒவ்வொரு முறையும்கூட்டணியற்ற ஆட்சி அமைவது தான்!இங்குள்ள, இரு பெரியதிராவிடக் கட்சிகளின் ஓட்டுசதவீதம், இரு இலக்கம் கொண்டது; நிலையானதும்கூட. அதேநேரம், சிறிய கட்சிகளின் ஓட்டு சதவீதம்,ஒற்றை இலக்கம் கொண்டது;நிலையற்றது. எனவே, பெரிய கட்சிகள், 75 சதவீதஇடங்களில் நின்றால் மட்டுமே, தனித்து ஆட்சி அமைக்க முடியும். மேலும், புதிதாக துவங்கியுள்ள அரசியல் கட்சியானது, முதலில், அனைத்து தொகுதிகளிலும்,தனித்து நின்று, தன் சொந்த பலம் என்ன என்பதை காட்ட வேண்டும். அதன்பிறகே, தன் ஓட்டு சதவீதத்திற்கு ஏற்ப, கூட்டணி கட்சிகளிடம் பேரம் பேச வேண்டும். அதை செய்யாமல், வெறுமனே கூடும் கூட்டத்தை மட்டுமே அடிப்படையாகவைத்து, '80 சீட்டு கொடு, துணை முதல்வர் பதவி கொடு' என்று எடுத்த எடுப்பிலேயே வீரவசனம்பேசினால், அதை, நிராகரிக்கும் துணிவும், பெரிய கட்சிகளுக்கு இருக்க வேண்டும். இத்தகைய துணிச்சல் ஸ்டாலினிடம் உள்ளது; ஆனால், பழனிசாமியிடம்இல்லை. அவர், ஸ்டாலினைதோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், இதில், சமரசம் செய்து கொண்டால், எதிர்காலத்தில்,'தலைவலி போய், திருகுவலி' வந்த கதையாகமாறி விடும். காரணம், கூட்டணி ஆட்சி என்பது, நித்திய கண்டம் போன்றது, சுதந்திரமாக முடிவுகள் எடுக்க முடியாது.அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால், தொழிலதிபர்கள் முதலீடு செய்ய தயங்குவர். அதே சமயம் கூட்டணி ஆட்சி என்பது, மக்கள் தீர்ப்பாகஅமைந்தால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.அதற்கு, தற்போதைய மத்திய அரசு ஓர் உதாரணம்!

பொது நலம் எனும் பொ ய்!

கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி, நீலகிரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: டாஸ்மாக்கடைகளில், மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், தற்போது, 10 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ள நிலையில்,மற்ற மாவட்டங்களிலும் வரும் ஜனவரி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.இதற்கு, அரசு கூறும் காரணம் என்ன தெரியுமா...'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களைசாலையில் வீசி செல்கின்றனராம். கால்நடைகளும், மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனராம்.அதனால், கூடுதலாக, பாட்டிலுக்கு, 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, காலிப் பாட்டில்களை திரும்பக் கொண்டு வந்து கொடுத்தால்,அந்த, 10 ரூபாயை திருப்பித் தருவராம்!அட அட... என்ன ஒரு ராஜதந்திரம்... 'குடி'மகன்களிடம் இருந்து, 10 ரூபாயை பிடுங்க, இத்தனைகம்பி கட்டும் கதைகளா?சரி... கால்நடைகள் பாதிக்கப்படுகிறது என்று காலி பாட்டில்களை வாங்குகிறீர்கள். டாஸ்மாக்கடைகளால், பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளதே... அதீத போதையால், பச்சிளம் குழந்தைகள் முதல், பல் போன பாட்டி வரை பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகின்றனரே... அதற்கு, என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்? குவாட்டர் மது பாட்டிலின்விலை, 200 ரூபாய் என்ற வகையில், 1,000 ரூபாய்க்கு ஐந்து பாட்டில்கள் வாங்கினால், பாட்டிலை திருப்பிக் கொடுப்பதன் மூலம், 50 ரூபாய்கிடைக்கிறது. 1,000 ரூபாய்க்கு மது வாங்குபவருக்கு, 50 ரூபாய் என்பது பிச்சைக் காசு. கண்டிப்பாக பாட்டில் திரும்ப வராது; 50 ரூபாய் கஜானாவுக்கு சென்று விடப் போகிறது!இதற்கு தானே, இந்த பொது நலம் வேடம்?'குடி'மகனிடமிருந்து வாங்கி, அவனுக்கே திருப்பித் தருவதற்கு பெயர், பொது நலம் அல்ல; பொய் நலம்!

ராகுலின் கோபம் யார் மீது?

பி.எஸ்.ரங்கஸ்வாமி, சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: அதானியைகைது செய்ய வேண்டும்என்பதில், மிகவும் பிடிவாதமாக இருக்கிறார், ராகுல். அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்னவென்றால், இந்தியாவில் சில மாநில ஆட்சியாளர்களுக்கு அதானி லஞ்சம் கொடுத்தார் என்பது! இதில், தமிழகமும்உள்ளடக்கம்!அதானியை கைது செய்து,முறையாக விசாரித்தால், லஞ்சம் கொடுத்தது, லஞ்சம்வாங்கியது எல்லாம் தெரியவரும். இதன்வாயிலாக, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார், ராகுல். இதில் பாருங்கள்... தங்கள்கூட்டணிக் கட்சியான, தி.மு.க., லஞ்சம் வாங்கிஉள்ளது என்று தெரிந்தும்,அதுபற்றி கண்டுகொள்ளாமல்,அதானி விஷயத்தில் தீவிரமாக இருக்கிறார்.ராகுலின் கோபம் அதானி மீதா அல்லது தி.மு.க., மீதா என்ற சந்தேகம் கிளம்புகிறதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

joe
டிச 07, 2024 14:58

சோம்பேறி அரசியல்வாதி துரைமுருகன் பேச்சு ஒரு ஊழல்வாதியின் பேச்சு என்பது அவர் பேவதிலிருந்தே வெளிப்படுகிறது.


Nagarajan S
டிச 05, 2024 20:06

டங்ஸ்டன்ன் சுரங்கம் அமைக்க திமுக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை 3/12/24 அன்று பார்லிமென்டில் மதுரை எம்பி வெங்கடேசன் கேள்விக்கு பதிலாக மத்திய அமைச்சர் காட்டினார். அதற்கு எந்த பதிலும் திமுக விடம் இல்லை.


G Ragavendran
டிச 04, 2024 20:03

Copper rate increased because of this parties DMK & ADMK. Electrical wire rates increased


Dharmavaan
டிச 04, 2024 16:15

எல்லா இடத்திலும் செப்புக்கு ஆலை வேலை டிசெய்யும்போது தமிழ் நாட்டில் என்ன வேறுபாடு.நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்கும் எதிரிகள் சதி இந்த கேவலத்துக்கு கோர்ட் ஆதரவு.


RAMAKRISHNAN NATESAN
டிச 04, 2024 18:53

நீதிபதிக்கோ, நீதிமன்றத்துக்கோ சொந்த நாடு நன்றாக இருக்கவேண்டும் என்கிற அக்கறை இருக்க வாய்ப்பில்லை .... ஆளும் தரப்பு இப்படித்தான் தீர்ப்பு / உத்தரவு என்று கேட்டால் பணியவே வாய்ப்பு ....


Dharmavaan
டிச 04, 2024 16:06

சுரங்கத்துக்கு அனுமதி அளிக்க இவன் யார் மோடி அந்த பலத்தை காட்ட வேண்டும் சுடலை அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்


Dharmavaan
டிச 04, 2024 16:03

சுடலை ஆணவத்தோடு நடக்க முழு காரணம் கோர்ட்... பெடரல் என்று சொல்லி மத்திய அரசை,/ஆளுநரை கேவலப்படுத்தும் பேச்சே கொலீஜியும் முறை நீக்கப்பட்டால்தான் இதற்கு முடிவு வரும்


sankar
டிச 04, 2024 13:15

தம்பி - மேலூரில் டன்ஸ்டன் கனிமம் இருக்கிறது, சுரங்கம் தோண்ட அனுமதி தாருங்கள் என்று கேட்டதே விடியலார் - என்பதை ஊடகங்கள் மறந்துவிட்டனவா - அல்லது மறைக்கின்றனவா


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 12:45

திமுக பாஜகவுடன் கள்ள உறவில் இருப்பதால் காங்கிரசும் அதிமுகவுடன் கைகோர்க்க விரும்பலாம் .... இதில் என்ன ஆச்சரியம் ????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 12:44

லாசுப்பேட்டை பாலு அவர்கள் இன்றைய அரசியலை மட்டும் கவனித்தால் போதாது.. இதே திமுக, அதுவும் ஸ்டாலினை விட மனோதிடம், வளைவுத்தன்மை கொண்ட கருணாநிதியின் தலைமையில் செயல்பட்ட பொழுது தமாக, பாமக ஆகிய கட்சிகளின் ஆதரவிலும் ஆட்சியை ஒட்டியது வரலாறு.. இன்றைய மத்திய அரசு கூட்டணிக்கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டாலும் இதுவரை உரசல், மிரட்டல் இல்லாமல் செல்கிறதே .... கவனிக்கவில்லையா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 12:41

லாசுப்பேட்டை பாலு அவர்களின் ஆசை என்னன்னா திமுகவுக்கு எதிரா வேறு கட்சிகள் கூட்டு சேர்ந்துவிடக்கூடாது ....


சமீபத்திய செய்தி