உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஜூலை 12, 1938-தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவரும், நெல்லை நீதிமன்ற நீதிபதியுமான சுப்பிரமணியன் அய்யர் - யோகாம்பாள் தம்பதிக்கு மகனாக, 1938ல் இதே நாளில் பிறந்தவர் ஜெய்சங்கர் எனும் சங்கர். இவர், சென்னை பி.எஸ்., பள்ளி, புது கல்லுாரிகளில் படித்தார் விவேகா பைன் ஆர்ட்ஸ், கல்கி பைன் ஆர்ட்ஸ் நாடக கம்பெனிகளில் நடித்தார். கல்கியின், 'அமரதாரா' நாடகத்தில் நடித்து புகழ் பெற்றார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி நடித்த காலத்தில், இரவும் பகலும் படத்தில் அறிமுகமானார்.துப்பறியும் பாத்திரங்களில் நடித்து, 'தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட்' ஆனார். இவரது, வல்லவன் ஒருவன், சி.ஐ.டி., சங்கர், பட்டணத்தில் பூதம், குழந்தையும் தெய்வமும் உள்ளிட்ட படங்கள் புகழ் பெற்றன; பல படங்கள், 100 நாட்கள் ஓடின.முரட்டுக்காளை, விதி, 24 மணி நேரம், பூவே பூச்சூடவா, பிள்ளை நிலா, ஊமை விழிகள், தளபதி உள்ளிட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இவர் 2000, ஜூன் 3ல் தன் 62வது வயதில் மாரடைப்பால் மறைந்தார்.'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி