உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

செப்டம்பர் 30, 1913

சிவகங்கை மாவட்டம், கானாடு காத்தானில், சென்னை மாகாண திவான் பகதுார் ராமசாமி செட்டியாரின் மகனாக, 1913ல், இதே நாளில் பிறந்தவர், ஆர்.ராமநாதன் செட்டியார்.இவர், சென்னை, எம்.சி.சி., பள்ளி, லயோலா கல்லுாரிகளில் படித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர், மேயராக தேர்வானார். பின், புதுக்கோட்டை, கரூர் பார்லிமென்ட் தொகுதிகளின், எம்.பி., யாக இருந்தார். ரிசர்வ் வங்கியின் முதல் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய வர்த்தக சம்மேளனத் தின் செயற்குழு உறுப்பினர், சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் இந்திய பொறுப்பாளர், இந்திய கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர், மகளிர், குடிசைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்கான பணிகளை செய்தார். கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமுடைய இவர், பல்வேறு விளையாட்டு கிளப்புகளின் உறுப்பினராக சேர்ந்து, விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார். பிரிட்டன், அமெரிக்கா, தென்னாப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, வணிக முறைகளை ஆய்வு செய்தார். 'நகரத்தார் வரலாறு' என்ற நுாலை எழுதிய இவர், தன், 82வது வயதில், 1995, டிசம்பர் 12ல் மறைந்தார்.சென்னையில், 'எம்.ஆர்.சி., நகர்' என்ற பகுதியின் பெயரால் நினைவுகூரப்படும், 'மேயர் ராமநாதன் செட்டியார்' பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை