உள்ளூர் செய்திகள்

பக்க வாத்தியம்

'எம்.பி., மீது என்ன கடுப்போ?'தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில், அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தர்மபுரிதி.மு.க., - எம்.பி., மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பன்னீர்செல்வம் பேசுகையில், 'ஒகேனக்கல்லை சுற்றுலா தலமாக்க வேண்டும்; ஜோதிஹள்ளி கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்களை சந்தித்து, நம்ம எம்.பி., மனு கொடுத்துள்ளார். மனு கொடுப்பது முக்கியமல்ல.'திட்டங்களை பெற்று வந்து முடிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மதிப்பர். நேற்று வரை நீங்கள் கீழே உட்கார்ந்து இருந்தீர்கள்; இன்று மேடையில் உள்ளீர்கள். பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'தனி அறையில் தர வேண்டிய அறிவுரையை, பொது மேடையில் கொடுக்கிறாரே... எம்.பி., மீது அமைச்சருக்கு என்ன கடுப்போ...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ