உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இதெல்லாம் ஒருநாள் கூத்து!

இதெல்லாம் ஒருநாள் கூத்து!

மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் அருகே தனிச்சியத்தில் அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தை, தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். அப்போது அமைச்சருடன், மதுரை கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து சர்க்கரை பொங்கல், கிச்சடி, சாம்பாரை ருசித்தனர்.ஆசிரியர்களிடம், 'உணவு நன்றாக உள்ளது. நாங்கள் வருகிறோம் என்பதால் இப்படி தயார் செய்யப்பட்டுள்ளதா. இந்த சுவை தொடருமா?' என, அமைச்சர் கேட்டார். அதற்கு ஆசிரியர்கள், 'எப்போதும் இதேபோல் தான் இருக்கும். மதிய உணவும் சுவையாக இருக்கும். மாணவர்கள் விரும்பி சாப்பிடுவர்' என்றனர்.மூத்த நிருபர் ஒருவர், 'இதெல்லாம் இன்று ஒருநாள் கூத்து... அமைச்சரும், கலெக்டரும் சில வாரங்கள் கழித்து சொல்லாமல், கொள்ளாமல் திடீர் விசிட் அடித்து, உணவை சாப்பிட்டு பார்த்தால் உண்மை தெரியும்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஜூலை 24, 2024 21:02

கலெக்டர் மந்திரிகள் சாப்பிட்ட அன்று இருந்த ருசி மாதிரி தினமுயிருந்தால் பள்ளி தலைமைக்கு கமிஷன் ஒன்றும் தேறாதே. கலெக்டர் அடுத்த சில தினங்களிலேயே தீடீர் விசிட் அடித்தால் சாயம் வெளுக்கும், ஆனால் செய்ய மாட்டார்கள்.


D.Ambujavalli
ஜூலை 24, 2024 16:54

குழந்தைகளுக்காக தனியாக வைத்திருப்பார்கள் தினம் தினம் சர்க்கரைப் பொங்கல் கொடுக்கிறார்களாம் அமைச்சரும் கலெக்டரும் அப்படியே நம்புவார்களாம் அவர்களுக்கும் தெரியாதா இது எத்தனை percent உண்மை என்று ?ஒரு குழந்தையை திடீரென்று கேட்டு, ஆசிரியர்கள் prompt செய்யாமல் உண்மை நிலையை அறிவார்களா ?


Raghavan
ஜூலை 24, 2024 09:40

எந்த ஹோட்டலில் இருந்து வாங்கி வந்தீர்கள் என்று கேட்டு இருந்தால் உடனே சொல்லியிருப்பார்கள்.


சமீபத்திய செய்தி