உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அது டாக்டருக்கு தெரியுமா?

அது டாக்டருக்கு தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மரகதாம்பிகை ஆரம்ப பள்ளி ஓட்டுச்சாவடியில் மனைவி, குடும்பத்துடன் சென்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஓட்டுப்பதிவு செய்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழகம், புதுச்சேரியில் மவுன புரட்சி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவர். மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார். இந்த தேர்தலில் பா.ம.க., போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெறும்' என்றார்.தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வது குறித்து கேட்டதற்கு, 'எல்லா இடங்களிலும் பணம் கொடுப்பது கடவுளுக்கே தெரியும்... காசே தான் கடவுளடா... அது கடவுளுக்கே தெரியுமடா...' என, பாட்டு பாடி விளக்கம் கொடுத்தார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஆரணி தொகுதியில் பா.ம.க., சார்பிலும் காசு, டோக்கன் எல்லாம் கொடுத்திருக்காங்க... அது டாக்டருக்கு தெரியுமா...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K Rajendran Rajendran
ஏப் 28, 2024 13:12

பா ம க தலைவர் ராம்தாஸ் அய்யா வாயை திறந்தாலே காமடி தான் ஒரே சிரிப்பு தான் போங்க


D.Ambujavalli
ஏப் 27, 2024 06:51

அவர் தங்கள் கட்சி பணம் கொடுக்கவில்லை என்று எங்காவது சொன்னாரா ? 'உலகத்தோடு ஒட்ட ஒழுகி இருக்கிறார் '


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை