உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கழுதை தேய்ந்து கட்டெறும்பு!

கழுதை தேய்ந்து கட்டெறும்பு!

'காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரமாண்ட ரத்த தான முகாம் நடைபெறும்' என, அக்கட்சியினர் அறிவித்தனர். அக்கட்சி நிர்வாகிகள், திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் ரத்த தான முகாம் திறப்பு விழாவிற்கு வந்தனர்.ஆனால், ஒரே ஒரு தொண்டர் மட்டுமே ரத்த தானம் செய்தார். எதிர்பார்த்த அளவிற்கு தொண்டர்கள் வராததால், 'அப்செட்' ஆன எம்.பி., அங்கிருந்து நழுவினார். ஒரே ஒரு தொண்டருக்கு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கிய பொன்னேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், அன்றைய தினம் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கி, அவரும் நழுவினார்.மூத்த நிருபர் ஒருவர், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா காங்கிரஸ் மாறிட்டு வருது... அதுக்கு இந்த ரத்த தான முகாம் தான் உதாரணம்...' என, தலையில் அடித்துக் கொண்டு நழுவினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R K Raman
ஜூன் 30, 2024 14:41

வந்தவர் கட்சிக்காரன் தானா அழைத்து வந்தனரா


D.Ambujavalli
ஜூன் 25, 2024 16:50

இப்படி எதையாவது ஆரம்பித்து, காங்கிரசின் லட்சணத்தை சந்திக்கு கொண்டுவர வேண்டுமா?


T.S.SUDARSAN
ஜூன் 25, 2024 11:07

இன்று பாட்டி இந்திரா ஜி கொண்டுவந்த எமெர்கெனசி தினம். இவர் நாட்டை திருத்தி இந்தியர் எல்லோருக்கும் பணம் கொடுப்பாராம். எமெர்கென்சியில் மக்கள் பட்ட கஷ்டம் இவருக்கு தெரியுமா?


புதிய வீடியோ