உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பதவியை பறிக்காம இருந்தா சரி!

பதவியை பறிக்காம இருந்தா சரி!

திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், ஸ்யாமளாபுரம் பேரூராட்சி, காளிபாளையத்தில், போகர் தாவரவியல் பூங்கா திறப்பு விழா நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் பேசுகையில், 'பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், எங்களை சமரசம் செய்ய முடியாது; எவ்வளவு தடை போட்டாலும் நிலத்தை மீட்டே தீருவோம். 'இப்படி செய்யப் போறோம்... அப்படி செய்வோம்'னு யாரிடமும் சொல்ல மாட்டேன். தகவல் தெரிஞ்சா எங்காவது பேசி தடுத்துடுறாங்க... அதனால தான், சத்தமே இல்லாம கோவில் நிலத்தை மீட்டு வருகிறோம்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'அதே மாதிரி எங்காவது பேசி, சத்தமில்லாம இவர் பதவியை பறிக்காம இருந்தா சரி...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர் ஆமோதித்து தலையாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை