உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மாவு அரைக்க போயிட்டாங்களோ?

மாவு அரைக்க போயிட்டாங்களோ?

வடசென்னை தி.மு.க., வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து, திருவொற்றியூர், தேரடி பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசினார்.சில தினங்களுக்கு முன், திருவொற்றியூர் அடுத்த சுங்கச்சாவடி சந்திப்பில் நடந்த பிரசாரத்தில் பேசிய அதே வசனத்தை, சினிமாவில், 'ரீ டேக்' எடுப்பது போல மீண்டும் பேசினார். இதனால், கடுப்பான பெண்கள் சிலர், கூட்டத்தில் இருந்து கலையதுவங்கினர்.இதைப் பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'என்னப்பா... நம்ம சின்னவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டம் கலையுது...' என, முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'இவர் எல்லா கூட்டத்திலும் அரைத்த மாவையே அரைத்தால் யார் தான் கேட்பாங்க... அதான் பெண்கள் வீட்டிற்கு போய் இட்லி மாவு அரைக்க கிளம்பிட்டாங்களோ என்னமோ...?' என, விரக்தியை வெளிப்படுத்தி நழுவினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 16, 2024 06:56

பேச்சும் சரி, மாவும் சரி, நைசாக வர வேண்டுமென்றால் பல முறை 'அரைக்க' வேண்டாமா? நல்ல வேளை, இன்னும் இரண்டு நாளில் பிரசாரம் முடிந்து மக்கள் காதுகளுக்கு விடுதலை கிடைக்கும்


புதிய வீடியோ