உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / காங்கிரசுக்கு ஓட்டு கேட்கிறார்!

காங்கிரசுக்கு ஓட்டு கேட்கிறார்!

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, தி.மு.க., அரசை கண்டித்து, மதுரையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பங்கேற்றார்.அப்போது தொண்டர்களிடம், கையை துாக்கி பிடித்தபடி நிற்குமாறு அவர் கூறினார். தோள்பட்டை வலி காரணமாக, வெகுநேரம் கையை துாக்கி பிடிக்க முடியாத பலர், கீழே இறக்கினர். இதை கவனித்த ராஜு, 'கையை துாக்கிப் பிடிங்கப்பா...' எனக் கூற, தொண்டர்கள் மீண்டும் கையை உயர்த்தினர். சிலர், 'அண்ணா... தோள்பட்டை வலிக்குது...' எனக் கூறி கையை இறக்க, டென்ஷன் ஆன ராஜு, 'ஏம்ப்பா... இது ஆர்ப்பாட்டம் இல்ல... மனித சங்கிலின்னா கையை துாக்கி பிடிங்கப்பா...' என, கண்டித்தார்.மூத்த நிருபர் ஒருவர், 'மனித சங்கிலி நடத்துறாரோ, இல்லையோ... மைக்கில் கை, கைன்னு காங்கிரஸ் கட்சி சின்னத்துக்கு ஓட்டு சேகரிக்கிறார்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை