உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அரசியல்வாதிகள் பரவாயில்ல!

அரசியல்வாதிகள் பரவாயில்ல!

கோடை வெயிலை சமாளிக்கும் பொருட்டு, அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக சென்னை மாநகராட்சியும், ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை திறந்தது. அந்த வகையில், திருவொற்றியூரின் பல பகுதிகளிலும்தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. ஆனால், அரசியல்வாதிகள் போலவே, ஆரம்பத்தில் தடபுடலாக திறந்து விட்டு, மறுநாள் அந்த பந்தலில் தண்ணீர் கூட வைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.சில இடங்களில், தண்ணீர் பந்தல்களுக்கான அமைப்பும் கிழிக்கப்பட்டு, கந்தல் கோலமாக காட்சியளித்தது. இந்நிலையில், சுட்டெரித்த வெயிலில், தண்ணீரை தேடி அலைந்த முதியவர் ஒருவர், மாநகராட்சி தண்ணீர் பந்தலின் பரிதாப நிலையை பார்த்து விட்டு, உடன் வந்த முதியவரிடம், 'இவங்களுக்கு அரசியல்வாதிகள் எவ்வளவோ பரவாயில்ல... திறந்த ஜோர்ல ஒரு சில தினங்களாவது தண்ணீர் வைப்பாங்க...' என, நொந்து கொண்டு, நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 13, 2024 06:28

தண்ணீரே பந்தலைத் திறந்தோமா , அன்றைக்கு ஒருநாள் போட்டோ வீடியோ விளம்பரம் முடிந்ததா என்று கிளப்புபவர்களிடம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும்


புதிய வீடியோ