உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நாங்க என்ன பண்றது?

நாங்க என்ன பண்றது?

வேலுார் மாவட்டம், காட்பாடியில் தனியார் பல்கலையில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பாரதிராஜா பேசுகையில், 'மாணவர்கள், கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். என் ஆசிரியர் அன்றே சொன்னார்... 'நீ திரைப்பட இயக்குனராக ஆவாய்' என்று. ஆனால், நான் நடிகனாக ஆசைப்பட்டேன். இறுதியில் இயக்குனராக பல படங்களையும் இயக்கினேன். காரணம், நாம் நம் இலக்கை நோக்கி செல்ல வேண்டும். நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ, அதை நோக்கி சென்றால், உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள்' என்றார்.மாணவர் ஒருவர், 'நம்ம இலக்கை பெற்றோர் தான நிர்ணயிக்கிறாங்க... விருப்பமே இல்லைன்னு சொல்லியும் இன்ஜினியரிங் சேர்த்து விட்டுட்டாங்க... நாங்க என்ன பண்றது...' என, முணுமுணுக்க, அருகில் இருந்த சக மாணவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 29, 2024 06:18

எல்லா மாணவர்களும் குறிக்கோள் அமைத்துக்கொண்டு நிலையாக நிற்பதில்லையே பாதிப் படிப்பிலேயே மனது மாறி திசை திரும்புகிறார்களே படிக்க வைக்கும் பெற்றோர்களின் பணம் வீணாவதும் இவர்களின் வருஷம் கழிவதும் நிகழ்கிறதே