உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / யார் காதுல இது ஏறும்?

யார் காதுல இது ஏறும்?

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, அம்மம்பாளையத்தில், ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று, தனியார் சார்பில் விவசாய கருத்தரங்கு நடந்தது. இதில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கருத்தரங்கில், அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்தபோது, அதில் பங்கேற்ற விவசாயிகள், கல்லுாரி மாணவ - மாணவியர் பலரும், சேரில் அமர்ந்தபடியே துாங்கி வழிந்தனர். இந்நிகழ்ச்சியை வீடியோ எடுத்தவர்கள், இதை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அமைச்சர் பேச்சு ஒருபுறம், பங்கேற்றவர்கள் துாக்கம் ஒருபுறம் என, சமூக வலைதளத்தில் வீடியோ பரவி, பலரும் கிண்டல் அடித்தனர்.இதை பார்த்த சிலர், 'ஆடிப்பெருக்கு நாளில் நிகழ்ச்சி நடத்தினா எப்படி...? விருந்து உண்ட மயக்கத்துல, யார் காதுல இது ஏறும்' என,'கமென்ட்' அடித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 07, 2024 17:03

அமைச்சரின் பேச்சில் சுவாரசியமான விஷயங்களோ, விவரங்களோ ஏதுமின்றி எழுதிக்கொடுத்ததை எழுத்துக்கூட்டிப் படித்தால், தூக்கம் வந்திருக்கும்


புதிய வீடியோ