வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாம் இவர்களே கற்றுக்கொடுத்த பாடம்தான் ரெய்டுக்கு வந்தால் சாவி ‘காணாமல் போக்கும்’ மந்திரத்தை அவர்களும் அறியக்கூடாதா ?
திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய, தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமையிலான சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர், முதலிபாளையத்தில் உள்ள, 'தாட்கோ' தொழிற்பேட்டையை பார்வையிட்டனர். இங்கு, 1995ல் திறக்கப்பட்ட பல கட்டடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. சில தொழிற்கூடங்கள் மட்டும் இயங்கி வருகின்றன.நல்ல நிலையில் இயங்கிய தொழிற்கூடத்தை பார்வையிட்டவர்கள், அருகே உள்ள பழைய கட்டடத்தை பார்க்கலாம் என்று கேட்டபோது, தாட்கோ பெண் அதிகாரி, 'சாவி இல்ல சார்...' என, இழுத்தார்.'அம்மா, கட்டடத்தை பார்த்து சரிசெய்ய தான் வந்திருக்கோம். நீங்க பயப்பட வேண்டாம்... உங்களை எதுவும் சொல்ல மாட்டோம். மத்தவங்ககிட்ட சொல்ற மாதிரி சாவி இல்லன்னு சொல்லாதீங்க...' என, நந்தகுமார் கூற, அதன்பின் அந்த கட்டடம் திறக்கப்பட்டு, குழுவினர் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.மூத்த நிருபர் ஒருவர், 'நம்ம அதிகாரிகள், எப்படி எல்லாம் கடுக்கா கொடுப்பாங்கன்னு நந்தகுமார் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காரே...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
எல்லாம் இவர்களே கற்றுக்கொடுத்த பாடம்தான் ரெய்டுக்கு வந்தால் சாவி ‘காணாமல் போக்கும்’ மந்திரத்தை அவர்களும் அறியக்கூடாதா ?