உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பிரசாரத்தை துவங்கிட்டார்!

பிரசாரத்தை துவங்கிட்டார்!

சென்னை, மாதவரத்தில், ஸ்ரீ கரிவரதராஜா பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், மாதவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.அப்போது, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் ஒவ்வொருவரையும் பக்கத்தில் அழைத்து அன்பாக நலம் விசாரித்தார். அதே சாக்கில், 'லோக்சபா தேர்தலில் எல்லாரும் தி.மு.க.,விற்கு தான் ஓட்டு போட வேண்டும்' என, பிரசாரம் செய்தார்.இதை கவனித்த பக்தர் ஒருவர், 'நாம எல்லாரும் பெருமாளிடம் வேண்டுதல் வைக்கலாம்னு வந்தா, இவர் நம்மகிட்ட வேண்டுதல் வைக்கிறதுக்காக கோவிலுக்கு வந்திருக்கார் போல...' என, முணுமுணுக்க, மற்றொரு பக்தர், 'ஓட்டு குறைஞ்சா, பதவிக்கு வேட்டு வச்சிடுவேன்னு முதல்வர் எச்சரிச்சதால, இப்பவே பிரசாரத்தை துவங்கிட்டார்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ