வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆகக்கூடி, தொண்டர்கள், நிர்வாகிகளுக்குக்கூட எந்த ‘நன்மையையும்’ எட்டாமல், போஸ்டரும், பசை வாழ்க்கயும்தான் என்று கிறுக்ககயில் 30 % என்ன 3 %கூட வரமாட்டார்கள்
தர்மபுரி மாவட்டம், அரூரில், 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது.இதில், தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் பழனியப்பன் பேசுகையில், 'கூட்டத்திற்கு மூன்றில் ஒரு பகுதியினர் தான் வந்துள்ளனர்; ஒன்றிய செயலர்கள் சிலர் பங்கேற்கவில்லை. இது எனக்காக அல்ல, கட்சிக்காக நடத்தப்படும் கூட்டம். 'கட்சியில் யாருக்கு தான் சங்கடம் இல்லை. எல்லாருக்கும் சங்கடம் உள்ளது; எனக்கும் சங்கடம் உள்ளது. இப்பணியில் எவ்வளவு சங்கடம் இருந்தாலும், கட்சிக்காக பொறுத்துக் கொண்டு, தலைவருக்கு உண்மை தொண்டனாக செயல்படுகிறேன்...' என்றார்.கூட்டம் முடிந்ததும் நிர்வாகி ஒருவர், 'பழனியப்பனுக்கு என்ன சங்கடம்... அ.தி.மு.க., ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சரா இருந்து நல்லா சம்பாதிச்சுட்டு, நாலு வருஷத்துக்கு முன்னாடி, தி.மு.க.,வுக்கு வந்து மாவட்டச் செயலர் பதவியும் வாங்கிட்டாரு... நாம இன்னும் போஸ்டர் தான் ஒட்டிட்டு இருக்கோம்...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தபடியே நடந்தனர்.
ஆகக்கூடி, தொண்டர்கள், நிர்வாகிகளுக்குக்கூட எந்த ‘நன்மையையும்’ எட்டாமல், போஸ்டரும், பசை வாழ்க்கயும்தான் என்று கிறுக்ககயில் 30 % என்ன 3 %கூட வரமாட்டார்கள்