உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு:தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில், மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமை திட்டம், தற்போது பா.ஜ., ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள், தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்து வருகின்றனர்.வாஸ்தவம் தான்... அதே மாதிரி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 'அல்வா' கொடுப்பது எப்படி என்பதையும் உங்களிடம் இருந்து பா.ஜ., தரப்பு கத்துக்காம இருந்தா சரிதான்! தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன் பேட்டி: தி.மு.க.,வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; 2026ம் ஆண்டு தேர்தலுக்குள் ஒன்றிணைவோம். அ.தி.மு.க.,வோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் நிலைப்பாடு. தி.மு.க.,வை ஆட்சியில் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க., நினைத்தால், பா.ஜ., கூட்டணிக்கு வரவேண்டும். இவர் சொல்வது சரிதான்... தி.மு.க., என்ற பெரியண்ணன் இடத்தை காலி செய்தால் தான், அ.தி.மு.க., என்ற தம்பிக்கு திண்ணை கிடைக்கும்... ஆனால், திண்ணையில் தனியாளா ஏறிட முடியாது... பா.ஜ., போன்ற பலசாலிகள் துணை அவசியம்!அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி பேச்சு: இந்திய துணை கண்டத்தில், ஸ்டாலினை போல் பொய் சொல்பவர்கள் யாரும் இல்லை. நாங்கள், முதல்வர் ஸ்டாலினை போல ஏமாற்ற மாட்டோம். ஓட்டளித்த மக்களை அ.தி.மு.க., ஏமாற்றி யதாக வரலாறே இல்லை.'ஸ்டாலின் ஆட்சியை நம்பி ஏமாந்தவங்களுக்கு எல்லாம், அடுத்த சாய்ஸ் நாங்க தான்... வாக்காளர்கள் வேற எங்கும் திசை திரும்பி போயிடாதீங்க'ன்னு சொல்றாரோ?முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா பேட்டி: கடந்த இரண்டு ஆண்டுகளாக, வேங்கைவயல் விசாரணையில் சந்தேகம் இருந்தது. அந்த விசாரணையில், எந்தவித வெளிப்படை தன்மையும் இல்லாமல் இருந்தது. இதில், யாரையோ பாதுகாப்பதற்காக, இது நடந்திருப்பது போல் நினைக்கிறேன். இதில், சி.பி.ஐ., விசாரணை கேட்பது சரிதான். அப்போது தான், உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும்.என்னமோ, சி.பி.ஐ., விசாரித்த எல்லா வழக்குகளிலும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிச்சு தண்டிச்ச மாதிரி சொல்றாங்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜன 28, 2025 20:48

அரசு கஜானா காலியாகக்கூடிய பல உருப்பபடாத இலவச திட்டங்களுக்கு மற்ற மாநிலங்களுக்கு திமுக வே வழிகாட்டி. இதில் மார்தட்டி பெருமை பட எதுவுமில்லை.