உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

கரூர் காங்.,- - எம்.பி., ஜோதிமணி பேட்டி: கவர்னர் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய்வாழ்த்து பாடலில், திராவிடம் என்ற சொல் இடம் பெறவில்லை; அது கண்டனத்துக்கு உரியது. திராவிடம் வெறும் சொல் அல்ல. தமிழகம் உள்ளிட்ட நான்கு தென் மாநிலங்களை குறிக்கும். கவர்னர், தொடர்ந்து தமிழக அரசையும், முதல்வரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார். பா.ஜ., தலைவர் போல செயல்படுகிறார். தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு உள்ள குறைந்த ஓட்டுகளும் காணாமல் போய் விடும்.பா.ஜ., ஓட்டுகள் காணாமல் போனால் இவங்களுக்குநல்லது தானே... அப்புறம் ஏன் கூப்பாடு போடுறாங்க? வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: நம்மை வைத்து தி.மு.க.,வுக்கு ஆத்திரமூட்ட பார்க்கின்றனர். 'திருமாவளவனுக்கு இவ்வளவு வளர்ச்சியா; விடுதலை சிறுத்தைகள் வேண்டாம்; வேறு கட்சியை கூப்பிடு' என, சொல்வதற்கு வழி வகுக்கின்றனர். அதேபோல், விடுதலை சிறுத்தைகளுக்கு கோபமூட்டி, 'எங்களுக்கு வேறு ஆப்ஷன் இருக்கிறது. உங்களுடன் இருக்க மாட்டோம்' என, பேச வைப்பர். இதெல்லாம் அரசியல் விளையாட்டு.அப்ப, தி.மு.க.,வுக்கு ஆத்திரமூட்டும்படி, 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும்' என பேசியது யாராம்?புதுச்சேரி முன்னாள் கவர்னர்தமிழிசை அறிக்கை: பிரதமர்மோடி, எந்த மொழிக்கும்கொடுக்காத முக்கியத்துவத்தை தமிழுக்கு கொடுக்கிறார். ஆனால், மத்திய அரசு, தமிழுக்கு எதிரானதுபோன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதல்வர். பனாரஸ் பல்கலையில் தமிழ் இருக்கை, மும்பை துறைமுகத்திற்கு தமிழ் பெயர் என, மாநிலம் கடந்தும், தமிழின் சிறப்பை எடுத்துச் சென்றிருக்கிறார் பிரதமர். தமிழை வைத்து அரசியல்நடத்துவோர், அதற்கு ஒரு பிரச்னை என்றால்எல்லா தோற்றத்தையும்ஏற்படுத்த தான் செய்வர்!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை: தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக, 30,000க்கும் அதிகமான பணியாளர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் பணி நிரந்தரம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால், 'அவர்கள் ஒரு மாதம் பணியாற்றினால், அடுத்த மாதம் பணி வழங்கக் கூடாது' என, அரசு ஆணையிட்டு உள்ளது. சமூக நீதிக்கும், மனிதநேயத்திற்கும் எதிரான இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.இருக்கிற பணியாளர்களுக்குசம்பளம் கொடுக்கவே கஜானாவைசுரண்டுறாங்க... இதுல பணி நிரந்தரம் எல்லாம் வாய்ப்பே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை