உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக் கழகத் தலைவராக மாறக்கூடாது. அதிகார அரசியலுக்காக, தி.மு.க., வழியில், ஓட்டு வங்கி அரசியலுக்காக, சீமான் பாதையில் செயல்பட முடிவு செய்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது. அவரது வீர வசனங்கள் அடங்கிய உரை, ஒரு அரசியல் திரைப்படத்தை பார்ப்பது போல் இருந்தது. மக்களும் அப்படி பார்த்தால் பிரச்னையில்லை... உணர்ச்சி வசப்பட்டு ஓட்டு மிஷினில் வேலையை காட்டிட்டா என்ன பண்றது? தமிழக காங்., பொதுச்செயலர்ரமேஷ்குமார் பேச்சு: திருவள்ளுவர்,இந்திய கிரிக்கெட் அணியின்சீருடை, 'ஜி 20' மாநாடு லோகோ, துார்தர்ஷன் மற்றும்பி.எஸ்.என்.எல்., லோகோ, வந்தே பாரத் ரயில் என, ஒவ்வொன்றுக்கும் காவிபெயின்ட் அடித்து குதுாகலித்துக்கொள்கிறது மத்திய அரசு. பி.எஸ்.என்.எல்., லோகோவில்,'கனெக்டிங் இந்தியா' என்ற பெயரையும், 'கனெக்டிங் பாரத்' என, மாற்றியுள்ளனர். இண்டியா கூட்டணி எழுச்சியால், பா.ஜ.,வினருக்கு இந்தியா என்றாலே பதற்றம் உருவாகிறது என்பதற்கு இதுவே சாட்சி. 'இண்டியா' கூட்டணியினருக்கு,'பாரத்' என்ற பெயரை கேட்டால் பதற்றம் வருவது ஏன்?அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பேட்டி: ஆட்சியை பிடிக்கும்வியூகத்தை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வகுத்து வருகிறார். தி.மு.க., அமைச்சர்கள், தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி வருகின்றனர்; உற்றார், உறவினர்களுக்கு பதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தலைமை முதல் தொண்டர்கள் வரை குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. தலைமை எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழி... இதில் என்ன ஆச்சரியம்?தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'கூட்டணி கட்சிகளுக்கு இடையே விவாதங்கள் நடக்கலாம்; விரிசல் இல்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியதை, வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் வழிமொழிந்துஉள்ளார். தி.மு.க., எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பாக மாறக்கூடாது எனவும் திருமாவளவன் முன்மொழிந்துள்ளார். 'தி.மு.க.,வை திட்டணும்; ஆனா, மீசையில் மண் படாம திட்டணும்' என்ற வகையில் மக்களையும், தொண்டர்களையும் திருமாவளவன் நன்றாகவே குழப்பி வருகிறார்.'தி.மு.க.,வை எதிர்க்கலாம்... திராவிடத்தை தான் எதிர்க்கக் கூடாது' என, திருமாவளவன் கோடிட்டு காட்டியிருப்பது இவருக்கு புரியலையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை