உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: என்னை விமர்சிப்பவர்களின் உண்மையானகுறி தி.மு.க.,வாகத்தான் இருக்கிறது. திருமாவளவன் இல்லை; தி.மு.க.,வை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் எனஎண்ணும் சக்திகள், என்னை ஒரு துாதராக பயன்படுத்தி, அதை நிறைவேற்ற வேண்டும்என நினைக்கின்றன. முதல்வர் ஸ்டாலினின்நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன்என்பதே எனக்கு மகிழ்ச்சி.

என்பதே எனக்கு மகிழ்ச்சி.

இவரை போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களை நம்பி தான்முதல்வர் ஸ்டாலின், 'இனி என்றைக்கும் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி தான்'னு மார்தட்டி சொல்கிறார் போலும்! தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: 'ஆண்டிற்கு, 100 நாட்கள் சட்டசபை நடத்தப்படும்' என, வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது இரண்டு நாட்கள் மட்டுமே சபையை நடத்தினர். அதுவும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறவில்லை. போற்றுபவர்களுக்கு அதிக வாய்ப்பும்,மக்கள் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு குறைந்த வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.அரசை எதிர்த்து, குறைகளை சுட்டிக்காட்டுபவர்களின் உரைகள், குறிப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றன.அ.தி.மு.க., ஆட்சியில், இவங்க சட்டசபையில் ஜெ., புகழ் பாடியதையும், அரசை எதிர்த்து பேசினால், குறிப்பில்இருந்து நீக்கியதையும் மறந்துட்டாரா?தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'நான்முதல்வராக இருக்கும் வரை, மதுரை அரிட்டாப்பட்டியில், டங்ஸ்டன் ஆலைக்குஅனுமதி கொடுக்க மாட்டேன்'என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபோல் தான் கடந்த காலத்தில், 'மதுவிலக்கு கொண்டு வருவேன். 'நீட்' தேர்வை விலக்குவோம். அரசு ஊழியர்களுக்கு பழையஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவேன். என் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்' எனக் கூறினார்.அப்ப, அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் ஆலையும் வந்துடும்னுசொல்றாரா?அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கான தேர்வில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக செய்திகள்வெளியாகி உள்ளன. தேர்வுக்கு முறைப்படி விண்ணப்பித்த தேர்வர்கள் பலரின் பெயர் பட்டியலில் விடுபட்டுள்ளது.தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டும்.குளறுபடிகள் நடக்கக் கூடாதுன்னு உருவாக்கப்பட்ட தேர்வாணையமே, குளறுபடிகளின் கூடாரமாக இருக்குதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
டிச 17, 2024 23:04

கூட்டணி போர்வையில் திருமா.. கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் திருவோடு எந்தி நிற்கும் வரை திமுக விற்கு வெற்றி முகம் தான். அப்பனுக்கும் பிள்ளைக்கும் முதலிரண்டு சிம்மாசனம். மற்றவர்கள் வெண்சாமரம் வீசி பிழைப்பை ஓட்ட வேண்டியது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை