உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: காமராஜரை பற்றி திருச்சி சிவா பேசியது தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எதற்கும் பணிந்து போகிற, பிறருக்கு தலைவணங்குகிற கட்சி கிடையாது. எதை, எப்போது செய்ய வேண்டும் என்பது எங்களுக்கும், எங்கள் கட்சி தலைமைக்கும் தெரியும். ஒருசில தவறுகள் நிகழ்ந்துள்ளன; முதல்வர் ஸ்டாலின் நல்ல விளக்கம் தந்துள்ளார். தேவைப்பட்டால் எல்லாரும் சேர்ந்து பேசுவோம். 'காமராஜர் விவகாரம் பற்றி இனிமே யாரும் பேச வேண்டாம்'னு, முதல்வரே சொல்லிட்ட பிறகும், எல்லாரும் சேர்ந்து பேசுறதுக்கு என்ன இருக்கு? தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: பழனிசாமி, 2021 வரை பா.ஜ., கூட்டணியில் இருந்தார். அவர் பா.ஜ., அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு கொண்டிருந்தார். காவிரி பிரச்னையை தீர்ப்பதற்கு, பழனிசாமி ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? காவிரி பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் அனுமதி இல்லாமல், மேகதாது அணை கட்ட முடியாது. எனவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், உச்ச நீதிமன்றமும் இதுபற்றி முடிவு செய்யும். 'மேகதாது அணையை கட்டியே தீருவோம்'னு கர்நாடகாவுல இருக்கிற காங்., ஆட்சியாளர்கள் தான் அடம் பிடிக்கிறாங்க... அவங்களை அடக்கும் அதிகாரம் இவருக்கு இருக்குதா? தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு : 'தி.மு.க., உறுப்பினர் ஆகவில்லை என்றால், மகளிர் உரிமைத்தொகை போன்ற சலுகைகள் கிடைக்காது' என, அக்கட்சியினர் மிரட்டுகின்றனர். உறுப்பினர் சேர்க்கையில் ஓ.டி.பி., பெறுவதற்கு இடைக்கால தடையை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தி.மு.க.,வை துரத்தி அடிக் கும் பணியை, மக்கள் மன்றம் நாளை நிறைவேற்றுவது நிச்சயம். அ.தி.மு.க.,வுடன் இவங்க ஓரணியில் இருந்தாலும், மனதளவில் தனித்தனி அணிகளா தான் இருக்காங்க... அதனால, இவங்க லட்சியம் நிறைவேறுவது கஷ்டம் தான்! பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த கிஷோர் என்ற மாணவர், ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்தார். தங்களை உக்ரைன் போரில் ஈடுபடுத்த அழைத்துச் செல்வதாக, பெற்றோருக்கு கிஷோர் அனுப்பியுள்ள செய்தி, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படிப்புக்காக ரஷ்யா சென்ற மாணவர்களை போரில் ஈடுபடுத்த, அந்நாட்டு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. கிஷோர் உள்ளிட்ட மாணவர்களை மீட்டு, தாயகம் அழைத்து வர வேண்டும். நம் நட்பு நாடான ரஷ்யாவுடன் மத்திய அரசு பேசி, இப்பிரச்னையை சுமுகமாக முடிக்கும் என நம்புவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை