மேலும் செய்திகள்
'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'
09-Sep-2025
'இன்ஸ்டாகிராம்' வீடியோக்கள் மூலமாக, சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்த, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த டீ மாஸ்டர் பாலு: என் சொந்த ஊரு தி ருச்சி, மணப்பாறை. காதல் கல்யாணம் பண் ணி ட்டு, பக்கத்து ஊரான விராலிமலைக் கு வந்துட்டேன். இங்க, 'மயில் பேக்கரி'யில டீ மாஸ்டரா இருக்கேன். பஜ்ஜி, வடைன்னு போட்டுட்டு இருந்த எனக்கு, 'நாம ஏன் இன்ஸ்டாகிராம்ல வீடியோஸ் போடக்கூடாது'ன்னு ஒரு நாள் மண்டைக்குள்ள பல்ப் எரிஞ்சது! 'பாலு ஐ லவ் விராலிமலை டி.என்., - 55' என்ற பெயரில், 'இன்ஸ்டாகிராம் பேஜ்' துவங்கினேன். விராலிமலை முருகன் கோவில் தான் ஆரம்பத்துல, 'கன்டன்ட்'டா இருந்துச்சு. அப்புறம் விராலிமலை ஊரை பத்தி வீடியோஸ் போட ஆரம்பிச்சேன். நிறைய பேர், 'லைக், கமென்ட்'னு பண்ண, உற்சாகமாகிட்டேன். விராலிமலை செக்போஸ்ட்ல ஒரு தடவை ரெண்டு பேருக்கு சண்டை ஆகிடுச்சு. எல்லாரும் அதை சீரியஸ் வீடியோவா எடுத்துட்டு இருக்க, நான் அதை காமெடி வீடியோவா போட, நல்ல வரவேற்பு. காலையில, 5:00 மணிக்கெல்லாம் கடைக்கு டீ போட போயிருவேன். கடையில இருந்துட்டே, ரோட்டுல போற பஸ் எல்லாத்தையும் வீடியோ எடுத்து, பாட்டு சேர்த்து, எடிட் பண்ணி போடுவேன். என் கடை ஓனரு, ஆர்வத்துல நான் ஏதோ பண்ணிட்டு இருக்கேன்னு சப்போர்ட் தான் பண்ணுவாரு. என் நண்பன் நித்திய செல்வம், 'ஐ லவ் விராலிமலை 2.0'ன்னு ஒரு இன்ஸ்டா பக்கம் ஆரம்பிச்சான். அடுத்து, 'நாம நகைக்கடை, ஜவுளிக்கடைன்னு அவங்களுக்கு விளம்பர வீடியோக்கள் போடலாம்'னு சொன்னான். அந்த மாதிரி, 'கொலாப்ரேஷன்' வீடியோக்களும் போட ஆரம்பிச்சோம். ஒவ்வொரு வீடியோவுக்கும், 3,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாய் வரை கிடைக்கும். என் பொண்ணு நல்லா டான்ஸ் ஆடுவா. 'என் வீடியோஸ் போடுவீங்களாப்பா'ன்னு கேட்க, மகளோட டான்ஸ் வீடியோக்கள் போட ஆரம்பிச்சேன். பலரும் என் மகளையும், என்னையும் தேடி வந்து கை கொடுத்து பேசிட்டு போறாங்க... சந்தோஷமா இருக்கு. என் இன்ஸ்டா வீடியோக்கள் மூலம் தான், 'மாமன்' படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது. இப்போ ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன். ஆரம்பத்துல வீடியோஸ் எடுத்தப்ப எல்லாம், 'வேற வேல இல்ல இவனுக்கு'ன்னு தலையில அடிச்சுக்கிட்டவங்க, இப்ப, 'ஏய் சூப்பர்டா'ன்னு சொல்றாங்க. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லாம் இப்போ என்னை தேடி வந்து பேசுறாங்க. பிடிச்சதை செஞ்சா, தொடர்ந்து உழைச்சா, வெற்றி கொஞ்ச துாரம் தான்!
09-Sep-2025