உள்ளூர் செய்திகள்

சொல்கிறார்கள்

'என் வெற்றிகள்தொடரும்!'

இந்திய அளவில் வாலிபால் போட்டிகளில் பல பதக்கங்களை குவித்திருக்கும் மிருதுளா: என், 13 வயதில் பள்ளி வாலிபால் டீமில் சேர்ந்தேன். என் பயிற்சியாளர்கள் கொடுத்த பயிற்சியால், வேகமாக முன்னேறினேன்.சேலத்தில் நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி தான், நான் பங்கேற்ற முதல் போட்டி. அதில் முதல் இடம் கிடைத்தது. என் பள்ளியின், தலைமை ஆசிரியர் என்னை, மாணவர்கள் மத்தியில் அழைத்துப் பாராட்ட, நான் பள்ளி ஸ்டார் ஆகிவிட்டேன்.பெற்றோர் தந்த நம்பிக்கை, தலைமை ஆசிரியரின் ஊக்கம், என் பயிற்சியாளர்கள் கற்றுத் தந்த ஆட்ட நுணுக்கங்கள் எல்லாம் சேர்ந்து, என் வெற்றிகளைத் தொடர வைத்தது.

சப்-ஜூனியர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம், நாக்பூர், கேரளாவில் நடந்த ஜூனியர் வாலிபால் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறேன். என் வெற்றிகளை தெரிந்து கொண்ட, பனிமலர் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் சக்திகுமார், 'ஸ்பான்சர்' மூலம் படிக்கும் வகையில், எனக்கு இலவசமாகவே இடம் கொடுத்தார்.கல்லூரியில் உள்ள பயிற்சியாளர் என்னை இன்னும் பட்டை தீட்ட, போட்டிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் விரிந்துள்ளது.இதுவரை மாவட்ட அளவில், 25 மெடல்கள், மாநில அளவில், 10 மெடல்கள், தேசிய அளவில் ஏழு மெடல்கள் என அசத்தியிருக்கிறேன். தற்போது, 'நேஷனல் சீனியர்' அணியில் இடம் பெற்று சர்வதேச அளவிலான போட்டிகளில் ஜொலிக்கத் தயாராகிவிட்டேன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை