உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி;சீரற்ற சிமென்ட் கல் சாலை மறைமலை நகரில் ஆபத்து

செங்கல்பட்டு: புகார் பெட்டி;சீரற்ற சிமென்ட் கல் சாலை மறைமலை நகரில் ஆபத்து

சீரற்ற சிமென்ட் கல் சாலை மறைமலை நகரில் ஆபத்து

மறைமலை நகர் நகராட்சி, சீத்தலைச் சாத்தனார் தெருவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் கற்கள் கொண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில், பாதாள சாக்கடை இணைப்பிற்காக, சில மாதங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு, கழிவு நீர் குழாய் பொருத்தப்பட்டது.சிமென்ட் கற்கள் மீண்டும் முறையாக அமைக்கப்படாமல், சீரற்ற நிலையில் உள்ளது. அதனால், வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது, சாலையில் உராய்ந்து வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, இவற்றை சரி செய்ய, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா.ஜெகதீசன், மறைமலை நகர்.

குண்டும் குழியுமான சாலை வண்டலுாரில் விபத்து அபாயம்

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ரயில் நிலையத்திலிருந்து, சிங்காரத் தோட்டம் செல்லும் சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், மேடும் பள்ளமுமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், அவ்வழியாகசெல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ராமசுப்பிரமணியன்,சிங்காரத்தோட்டம்.

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் கயப்பாக்கம் விவசாயிகள் சிரமம்

சித்தாமூர் அருகே கோட்டைபுஞ்சை கிராமத்தில் இருந்து கயப்பாக்கம் செல்லும் தார் சாலை உள்ளது.தினசரி, இந்த சாலையில் இருசக்கர வாகனம், கார் பேருந்து என, ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.வயல்வெளிப் பகுதியில் உள்ள இச்சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள்,சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.- து.கந்தன், சித்தாமூர்.

மின் மோட்டார் பழுது குடிநீர் வினியோகம் பாதிப்பு

கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம் வீரபாகு நகர் பிரதான சாலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில், மின் மோட்டார்பொருத்தி, குடிநீர் தொட்டி வாயிலாக,அப்பகுதிவாசிகள் குடிநீர் பெற்றுவந்தனர்.இதில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அதை பழுது நீக்க யாரும் முன்வரவில்லை.இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை சீரமைக்கப்படாமல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, பழுதான மின் மோட்டாரை சீரமைத்து, மீண்டும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.கிருஷ்ணன், வீரபாகு நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி