புகார் பெட்டி பகுதிக்கு
பூங்காவை புனரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கைவண்டலுார் ஊராட்சி, ஓட்டேரி விரிவு, 13வது வார்டு வால்மீகி தெருவில், பாரதி திடல் என்ற பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா 22 சென்ட் பரப்பில் உள்ளது.பகுதிவாசிகளின் ஒரே பொழுதுபோக்கு இடமான இப்பூங்கா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித பராமரிப்புமின்றி, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது.பூங்காவை புனரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பகுதிவாசிகள், பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.பூங்காவை புனரமைக்க, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எல்.கமலக்கண்ணன்,வண்டலுார்.