உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / நிழற்குடையால் விபத்து அபாயம்

நிழற்குடையால் விபத்து அபாயம்

அண்ணா நகர் மண்டலம், நியூ ஆவடி சாலை, ஐ.சி.எப்., அருகில் இரு மார்க்கத்திலும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருந்த தகரத்தால் ஆன பயணியர் நிழற்குடைகள், சாலையில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால், அவ்வழியாக செல்வோர் விபத்து அபாயத்தில் செல்கின்றனர். தவிர, பேருந்திற்காக காத்திருக்கும் பயணியரும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, நிழற்குடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ