உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கோயம்புத்தூர் / பெண்கள் பள்ளி அருகே குப்பைக்கழிவு கொட்டுவதை தடுத்தால் கிடைக்கும் நிரந்தர தீர்வு

பெண்கள் பள்ளி அருகே குப்பைக்கழிவு கொட்டுவதை தடுத்தால் கிடைக்கும் நிரந்தர தீர்வு

துரத்தும் நாய்கள்

நீலிகோணாம்பாளையம், இந்திரா கார்டன், வீரமாச்சியம்மன் கோவில் அருகே, ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றுத்திரிகின்றன. தெருவில் நடந்து செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன. இரவில் பைக்கில் செல்வோரை துரத்தி கீழே விழ வைக்கின்றன.- பரணி, நீலிக்கோணாம்பாளையம்.

சேதமடைந்த ரோடு

மதுக்கரை, அரசு மருத்துவமனை வழியாக பைபாஸ் செல்லும், 26வது வார்டு, முல்லை நகர் பிரதான சாலையின் இறுதி பகுதி மோசமாக சேதமடைந்துள்ளது. பைபாஸ் சாலை ஏறும் பகுதியில் தார் முழுவதும் பெயர்ந்து, கரடு, முரடாக உள்ளது. வாகனங்கள் ஏறவும், இறங்கவும் சிரமமாக உள்ளது. பிரதான சாலையாக இருப்பதால் விரைந்து சீரமைத்து தர வேண்டும்.- கார்த்திக், மதுக்கரை.

பள்ளியருகே கழிவுகள்

கூட் செட் ரோடு, தலைமை தபால் நிலையம் அருகே, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, தொடர்ந்து ஓட்டல், பேக்கரி கழிவுகள் உள்ளிட்ட குப்பையை சாலையில் கொட்டுகின்றனர். நிரம்பி வழியும் குப்பையால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி அருகே நோய் பரவும் அபாயம் உள்ளதால் இங்கு குப்பை கொட்டாமல் இருக்க, நிரந்தர தீர்வு காண வேண்டும்.- விசுவாசம், டவுன்ஹால்.

சரிசெய்யப்படாத ரோடு

உருமாண்டம்பாளையம், சாஸ்திரி நகர், 13வது வார்டில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு பணி காரணமாக, சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த இடங்களில் சாலை சரிசெய்யவில்லை. குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகிறது. சேறும், சகதியுமான சாலையை பயன்படுத்த முடியாமல், மக்கள் அவதியுறுகின்றனர்.- பார்வதி, சாஸ்திரி நகர்.

அடிக்கடி விபத்து

கஸ்துாரிநாயக்கன்பாளையம், நேரு நகர் கார்டனில், பல ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் உள்ள பள்ளங்களால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மழைக்காலத்தில் இச்சாலையை பயன்படுத்த முடியவில்லை.- வெங்கடேசன், நேரு நகர்.

பயணிகளுக்கு சிரமம்

சுந்தராபுரம், காந்தி நகர், பேருந்து நிறுத்தம் அருகே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெண்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். இங்கு, சில நபர்கள் பேருந்து நிறுத்தம் அருகிலேயே நின்று புகைபிடிக்கின்றனர். இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.- சிவராமன், மதுக்கரை.

பகலிலும் தெருவிளக்கு பளிச்

கோவை மாநகராட்சி, 41வது வார்டு, பொன்னுசாமி நகர், ஜெகதீஸ் நகர் பகுதிகளில் தெருவிளக்குகள் பல நாட்கள், பகலிலும் எரிகிறது. ஆனால், இரவில் எரிவதில்லை. மின்சாரம் வீணாவது குறித்து புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.- ரவீந்திரன், பொன்னுசாமி நகர்.

சேறும், சகதியும்

வடவள்ளி, 38வது வார்டு, ஜே.எம்., அவென்யூவில், பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. மண்ணாக இருக்கும் சாலையில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக இருக்கிறது. வாகனங்களை இயக்கவும், நடந்து செல்லவும் முடியவில்லை.- முரளி, வடவள்ளி.

மழையால் சேதமான ரோடு

செல்வபுரம், என்.எஸ்.கே., வீதி தார் ரோடு மழையில் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையோரம் தார் அரித்து குழியாக உள்ளது. இதனால், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. மீறி சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றனர்.- சங்கர், செல்வபுரம்.

கடிக்கும் நாய்

வடவள்ளி, கோல்டன் நகர், குடியிருப்பு அருகே, கருப்பு நிற தெரு நாய் ஒன்று சாலையில் நடந்து செல்பவர்களையெல்லாம் துரத்தி கடிக்கிறது. வெறிபிடித்தது போல் சுற்றும் நாயால், சாலையில் யாரும் நடக்கவே முடியவில்லை. குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கும் நாயை பிடிக்க வேண்டும்.- கணேசன், வடவள்ளி.

அகற்றப்படாத கழிவுகள்

தொண்டாமுத்துார் ரோட்டில், வீரகேரளம் அருகில், ஜே.சி.பி., வாயிலாக வாய்க்கால் துார்வாரப்பட்டது. பெருமளவில் கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டது. ஒரு வாரத்திற்கு மேலாகியும் கழிவுகளை அகற்றவில்லை. வாகனஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது.- உன்னிகிருஷ்ணன், வீரகேரளம்.

தெருவிளக்கு பழுது

ராமநாதபுரம், 64வது வார்டு, அல்வேர்னியா பள்ளி அருகே, 'எஸ்.பி -38, பி -6' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவில் பாதுகாப்பறற சூழல் நிலவுவதால், விரைந்து தெருவிளக்கை சரிசெய்து தர வேண்டும்.- ராஜா, ராமநாதபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை