உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கோயம்புத்தூர் / குடிநீர் குழாய் உடைந்து சாலையில் நீர் வீண் 16, 78 வது வார்டுகளை அதிகாரிகள் கவனிக்காதது ஏன்?

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் நீர் வீண் 16, 78 வது வார்டுகளை அதிகாரிகள் கவனிக்காதது ஏன்?

1.சேதமடைந்த கம்பம் பாப்பநாயக்கன்பாளையம், ஸ்ரீராம் அவென்யூ, கருப்பகால் வீதி சந்திப்பில், சாலையோரம் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. பாதுகாப்பற்ற கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும். - மோகன்குமார்:

Gallery2. உடைந்த சிலேப்புகள் சாய்பாபாகாலனி, 45வது வார்டில், சாலையோரம் நடைபாதை சிலேப் உடைந்து, மோசமான நிலையில் உள்ளது. பாதசாரிகளின் கால்கள் குழியில் மாட்டி, கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. - லெனின்: 3. சகதியான ரோடு வேலாண்டிபாளையம், 16வது வார்டு, கே.என்.ஜி.புதுார் பிரிவு, எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் மண் சாலையால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாய் உள்ள சாலையில், வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. - கண்ணன்: 4. குழாய் உடைப்பு செல்வபுரம், 78வது வார்டு, வடக்கு ஹவுசிங் யூனிட், அய்யப்பன் கோயில் அருகில் உள்ள சிறுவாணி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால், தண்ணீர் விநியோகம் செய்யும்போது பெருமளவு தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் சாலை முழுவதும் வழிந்தோடி, சாக்கடையில் கலக்கிறது. - சங்கர்: 5. வழுக்கி விழுகிறோம் சின்னவேடம்பட்டி, மெயின் ரோட்டில், குடிநீர் குழாய் உடைந்து வாரக்கணக்கில் சாலையில் தண்ணீர் வழிந்தோடுகிறது. குழிகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர். - சந்திரமோகன்: 6. பழுதான தெருவிளக்கு மாநகராட்சி, ஆறாவது வார்டு, டி.வி.எஸ்.நகர், சரவணா நகர் வடக்கு விரிவாக்கம், ஆதித்யா அவென்யூ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி பின்புறம், மின்கம்பத்தில் ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. - காசிநாதன்: 7. சீரமைக்கப்படாத ரோடு கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியம்பாளையம், ஸ்ரீ சக்தி அவென்யூவில் பாதாள சாக்கடை குழாய் பதிப்புக்காக கடந்த மார்ச் மாதம், சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னர், புதிய சாலை அமைக்கப்பட்டது. இதில், ஸ்ரீ சக்தி அவென்யூவில் சாலை அமைக்காததால், குடியிருப்புவாசிகள் சிரமப்படுகின்றனர். - விக்னேஷ்: 8.நீர்நிலையில் செப்டிக் கழிவுகள் செல்வபுரம் - உக்கடம் ரோட்டில் நொய்யல் நீர்வழிப்பாதையில், செப்டிக் டேங்க் கழிவுநீரை விடுகின்றன. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில், செப்டிக் டேங்க் லாரிகளில் வந்து கழிவுநீரை அப்படியே கலக்கவிடுகின்றனர். 9.ஆக்கிரமிப்பால் சிரமம் காந்திபுரம், ஜி.பி.சிக்னலில் இருந்து, ராமகிருஷ்ணா மருத்துவமனை திருப்பம் வரை, வலது - இடதுபுறம் சாலை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நடைபாதையை ஆக்கிரமித்து வீட்டின் குளியலறையை கட்டியுள்ளதுடன், துணி துவக்கவும் அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர். சிமென்ட் கலவை மெஷின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் சாலையில் வைத்துள்ளனர். - காந்திபுரம்:9 இருளால் பாதுகாப்பில்லை நீலிக்கோணாம்பாளையம், 55வது வார்டு, ரேணுகா நகர், இரண்டாவது வீதியில், பல ஆண்டுகளாக தெருவிளக்கு வசதியில்லை. இரவு நேரங்களில் வெளியில் நடமாடவே பாதுகாப்பில்லை. குடியிருப்பு பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. - ராபர்ட்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி