புகார் பெட்டி..
வேகத்தடையால் அவதி கள்ளக்குறிச்சி புதுவீட்டு சந்து தெருவில் அதிக அளவிலான வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். -பிரேம், கள்ளக்குறிச்சி. -டாஸ்மாக் கடை அகற்றப்படுமா? தியாகதுருகம் தஞ்சாவூரான் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். -கிருஷ்ணன், தியாகதுருகம். துார்ந்துபோன ஏரி வாய்க்கால் சின்னசேலம் ஏரிக்கு பூசப்பாடி, எலவடி கிராமங்கள் வழியாக வரும் வரத்து வாய்க்கால் துார்ந்து போய் கிடப்பதால், நீர் வரத்து குறைந்து விட்டது. -மகாலட்சுமி, சின்னசேலம்.