புகார் பெட்டி: சேதமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
வ ண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த, காரணித்தாங்கலில் இருந்து, பேரீஞ்சம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த சாலை, ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது, அவ்வப்போது, மழை பெய்து வரும் நிலையில், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் நிலைத்தடுமாறி விழுந்து வருகின்றனர். எனவே, சேதமான பேரீஞ்சம்பாக்கம் சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி. முத்துகுமார், பேரீஞ்சம்பாக்கம்.