உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்:புகார் பெட்டி;சாலையின் இரு புறங்களிலும் வர்ண கோடு போடப்படுமா?

காஞ்சிபுரம்:புகார் பெட்டி;சாலையின் இரு புறங்களிலும் வர்ண கோடு போடப்படுமா?

சாலையின் இரு புறங்களிலும் வர்ண கோடு போடப்படுமா?

சாலமங்கலம்,- மாகாணியம் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.வாகன ஓட்டிகளின் கோரிக்கையையடுத்து, 1.55 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையின் இரண்டு பக்கங்களிலும் வெள்ளை கோடுகள் போடவில்லை.இதனால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையின் அகலம் தெரியாமல், எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பிரதான சாலையின் இரண்டு பக்கங்களிலும், வெள்ளை வர்ண கோடு போட, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பா. பூபாலன்,மாகாணியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை