காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஆடுகள் கட்டும் இடமாக மாறிய பள்ளி வளாகம்
ஆடுகள் கட்டும் இடமாக மாறிய பள்ளி வளாகம்
உ த்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் கிராமத்தில், அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில், அப்பகுதியைச் சேர்ந்தோர் ஆடுகளை கட்டி வருகின்றனர். ஆடுகள் வெளியேற்றும் கழிவுகள் அங்கேயே தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுத்தொல்லை இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளி வளாகத்தில் ஆடுகள் கட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.சுந்தரம், உத்திரமேரூர்.