உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஆர்.கே.பேட்டை பஜாரில்பேனர்களால் அபாயம்ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியே, பேருந்து நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருந்து, தினமும் 10,000க்கும் மேற்பட்டோர் பேருந்து வாயிலாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்த பகுதியில் ஏராளமான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும், விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன.எனவே, போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இவற்றை அகற்ற வேண்டும்.- சி.தேவன், ஆர்.கே.பேட்டை.ஆட்டோ கட்டணம்முறைப்படுத்த வேண்டும்திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம், பைபாஸ், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகம் மற்றும் முருகன் மலைக்கோவில் ஆகிய இடங்களுக்கு பெரும்பாலான மக்கள் மற்றும் ரயில் பயணியர் ஆட்டோ மூலம் சென்று வருகின்றனர்.ஆனால், ஆட்டோ ஓட்டுனர்கள் தாறுமாறாக கட்டணத்தை வசூலிக்கின்றனர். அதாவது, அரை கி.மீ.,க்கு 100 ரூபாய், 2 கி.மீ.,க்கு 200 - 250 ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.இதனால், நடுத்தர மக்கள் ஆட்டோவில் பயணம் செய்வது கேள்விக்குறியாக உள்ளது. கட்டணம் அதிகம் என கேட்கும் வாடிக்கையாளர்களிடம் ஓட்டுனர்கள் தகராறு செய்கின்றனர்.எனவே, மோட்டார் வாகன ஆய்வாளர் கண்காணித்து, நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க, ஆட்டோ ஓட்டுனர்களிடம் அறிவுறுத்த வேண்டும்.- க.பாஸ்கர், திருத்தணி.சாலையில் படரும் செடிகள்வாகன ஓட்டிகள் அவதிஊத்துக்கோட்டை பேரூராட்சி, அய்யனார் நகர் பகுதியில் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு, ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்களின் ஓரங்களில் உள்ள செடிகள் வளர்ந்து சாலையில் படர்கிறது. இதனால், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அய்யனார் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.நந்தகுமார், ஊத்துக்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ