உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பெண் பயணியரை ஏற்றாத பஸ் கண்டக்டர் டிஸ்மிஸ்

பெண் பயணியரை ஏற்றாத பஸ் கண்டக்டர் டிஸ்மிஸ்

விழுப்புரம்,:விழுப்புரம் மாவட்டத்தில், அரசு இலவச பஸ்களில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக புகார் எழுந்தது. அதையடுத்து டிரைவர், கண்டக்டர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுரை வழங்கியது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி காலை 8:00 மணிக்கு, விக்கிரவாண்டியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், முத்தாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.அதுகுறித்து விசாரித்த விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அர்ஜுனன், இலவச பஸ்சில் பெண் பயணியரை ஏற்றாமல் சென்ற டிரைவர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்தும், தற்காலிக கண்டக்டர் தேவராசுவை பணிநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி