உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பயன்பாடில்லாத சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

பயன்பாடில்லாத சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

உத்திரமேரூர், உத்திரமேரூர் அடுத்த வெள்ளாமலை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, 30 ஆண்டுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உள்ளது.இதையடுத்து, அப்பகுதி மக்கள், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி தரும்படி கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வேறொரு பகுதியில், இரண்டு ஆண்டுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே, அப்பகுதி சிறுவர்கள் அடிக்கடி விளையாடி வருகின்றனர்.அப்போது, எதிர்பாராதவிதமாக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து, சிறுவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.எனவே, பயன்பாட்டில் இல்லாத சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி