உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கோவிந்தவாடியில் சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்

கோவிந்தவாடியில் சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்

கோவிந்தவாடி, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், கோவிந்தவாடி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தின் வழியாக, 2 கி.மீ., துாரத்திற்கு, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், கிராமப்புற சாலை உள்ளது.இங்கு சமீபத்தில் தார் சாலை போடப்பட்டது. கோவிந்தவாடி பேருந்து நிறுத்தம் அருகே, வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகள் அருகே, சாலையோரம் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாகி உள்ளது.இதனால், கோவிந்தவாடி கிராம பேருந்து நிறுத்தம் வழியாக வாகனங்கள் செல்லும் போது நிலை தடுமாறி வயலில் கவிழும் அபாயம் உள்ளது.எனவே, சாலையோரம் ஏற்பட்டிருக்கும் தார் சாலை அரிப்பை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாங்கள் தார் சாலை போடும் போது, சரியாக சாலை போட்டு மண் அணைத்துள்ளோம். சென்னை- - கன்னியாகுமரி தொழில் வழிதட சாலை போடும் பணியாளர்கள் அரைகுறையாக போட்டதால், அரிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஆய்வு செய்து சரி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை