உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கஞ்சா பறிமுதலில் டபுள் வசூல் பார்த்த போலீஸ் அதிகாரி!

கஞ்சா பறிமுதலில் டபுள் வசூல் பார்த்த போலீஸ் அதிகாரி!

''தி.மு.க., புள்ளியின் திட்டம் பலிக்காம போயிட்டு வே...'' என்றபடியே, நாட்டு சர்க்கரை டீக்கு ஆர்டர் தந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''விளக்கமா சொல்லுங்கப்பா...'' என்றார், அன்வர்பாய்.''லோக்சபா தேர்தல்ல, மத்திய சென்னை தொகுதியில தி.மு.க., சார்புல போட்டியிட்ட தயாநிதியை, அண்ணாநகர்ல புகழ் பெற்ற கிளப்புக்கு தி.மு.க., புள்ளிகள் கூட்டிட்டு போய், உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுனாவ...''தயாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் வினோஜ் செல்வத்தை, மேற்கு மாவட்ட பா.ஜ., செயலர் நரேன் ஏற்பாட்டுல, அதே கிளப்புக்கு கூட்டிட்டு போய், உறுப்பினர்களிடம் அறிமுகப்படுத்தினாவ வே...''அந்த கிளப் நிர்வாகத்துல, வடசென்னை தி.மு.க., புள்ளியின் அதிகாரம் தான் கொடிகட்டி பறக்கு... இதனால, பா.ஜ., வேட்பாளரை கூட்டிட்டு வந்த நரேனை கிளப் உறுப்பினர் பதவியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்ய ஏற்பாடு செஞ்சாரு வே...''ஆனா, அதுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தர மறுத்துட்டாவ... இதனால, சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்தாகிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி.''ரேஷன் அரிசியை மாமூலா வாங்குறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி ஒருத்தர், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் ரகசிய டீலிங் வச்சிருக்காருங்க... அந்த அதிகாரிக்கு சொந்தமா கோழி பண்ணை இருக்கு...''அரிசி கடத்தல் கும்பலிடம் இருந்து மாமூலா அரிசி மூட்டைகளை வாங்கி, தன் கோழி பண்ணைக்கு அனுப்பிடுறாருங்க... அது மட்டுமில்லாம, கஞ்சா விற்பனை, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு பிடிபடுறவங்களை, ரேஷன் அரிசி கடத்தல் கும்பலிடம் வேலைக்கு பரிந்துரை செய்றாருங்க...''இதுக்கு முன்னாடி, 'துாத்துக்குடியில இவர் இருந்தப்ப, ஆபாச 'சிடி' விற்பனை கும்பலிடம் மூணு ஆப்பிள் ஐ போன்களை மாமூலா வாங்கியிருக்காரு... ''அங்க இருந்து இடமாறுதல்ல கோவில்பட்டி வந்தும், அரசு குடியிருப்பை காலி செய்யாம தகராறு பண்ணியிருக்கார்'னு இவர் மேல ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வரிசை கட்டுதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.டீ கடை ரேடியோவில், பிரபல ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்த் படத்தின் பாடல் ஒலிக்க, அதை ரசித்தபடியே, ''என்கிட்டயும் ஒரு போலீஸ் சங்கதி இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தாார்...''சென்னை பஸ் ஸ்டாண்டை கிளாம்பாக்கத்துக்கு மாத்திட்டால்லியோ... இந்த வளாகத்துலயே போலீஸ் ஸ்டேஷனும் இருக்கு ஓய்...''இதுல இருக்கற ஒரு அதிகாரி, சமீபத்துல பஸ் ஸ்டாண்ட் வளாகத்துல கஞ்சா விற்பனையில ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள் அஞ்சு பேரை பிடிச்சு, 2 லட்சம் ரூபாய் மதிப்பு கஞ்சாவை பறிமுதல் செஞ்சார்... ஆனா, வழக்கு ஏதும் பதிவு பண்ணாம, அவா பேரன்ட்சை கூப்பிட்டு பேரம் பேசி, சில லட்சங்களை சுருட்டிண்டார் ஓய்...''அப்பறமா, பறிமுதல் செய்த கஞ்சாவை, ஊரப்பாக்கம் பகுதியில் கஞ்சா விக்கற ஒரு கும்பலிடம் குடுத்து, அதுக்கான பணத்தை வாங்கிண்டார்... இது இல்லாம ஹோட்டல்கள், பார்கள், மசாஜ் சென்டர்களுக்கு, கீழ்மட்ட போலீசாரை அனுப்பி மாதாந்திர மாமூல் வாங்கறார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிவுக்கு வர, பெரியவர்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R.RAMACHANDRAN
மே 05, 2024 16:38

இந்த நாட்டில் காவல் துறையினர் அனைத்து விதமான குற்றங்கள் செய்வதற்கு அங்கீகாரம் பெற்றவர்கள் செயல்பட்டு குற்றங்களை அபிவிருத்தி செய்து ஆதாயம் அடைகின்றனர்


Anantharaman Srinivasan
மே 05, 2024 11:27

கூடிய சீக்கிரம் கஞ்சா திராவிட ஏஜென்சிகள் உதயமாகும்


Dharmavaan
மே 05, 2024 06:47

போலீஸ் திருடர்களை சுட்டுத்தள்ள வேண்டும்


D.Ambujavalli
மே 05, 2024 06:47

மாணவர்களிடம் பிடிபட்ட சரக்குக்கே இவ்வளவு வசூல் என்றால், மன்னன், மாமன்னன்களெல்லாம் இன்னும் பெரிய இடங்களுக்கு எவ்வளவு கப்பம் கட்டியிருப்பார்கள்? இந்நிலையில் போதை ஒழிக்க ‘விஸ்வரூபம்’ எடுக்கிறாராம் முதல்வர் இதுதான் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் நிலைப்பாடு


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை