உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கப்படுமா?

நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கப்படுமா?

மதுராந்தகம்,:மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது மற்றும் 11வது வார்டில், மோச்சேரி பகுதி அமைந்துள்ளது. மதுராந்தகத்தில் இருந்து மோச்சேரி வழியாக பாப்பநல்லுார் வரை, தடம் எண்: டி16 அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட இந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், அவ்வழியாக சென்ற பயணியர் மற்றும் மாணவ - மாணவியர் சிரமம் அடைந்து வருகின்றனர்.தற்போது, அவ்வழியாக இயக்கப்பட்ட பேருந்து, அய்யனார் கோவில், மொறப்பாக்கம், கழினிப்பாக்கம் வழியாக, பாப்பநல்லுார் சென்று வருகிறது. அதனால், மோச்சேரி, புதுார், அருந்ததிபாளையம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தோர், மதுராந்தகம் டவுன் பகுதிக்கு செல்ல அவதிப்படுகின்றனர்.எனவே, நிறுத்தப்பட்ட தடம் எண்: டி16 பேருந்தை, மீண்டும் மோச்சேரி வழியாக இயக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை