உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் மசூதி!

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் மசூதி!

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''கவர்னருக்கு, 'மாஜி' எம்.எல்.ஏ., 'டின்னர்' குடுத்திருக்காருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''மஹாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், சமீபத்துல திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு போற வழியில, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு போயிருக்காரு... அப்ப, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், இப்ப பா.ஜ., செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிற கோபால்சாமி அழைப்பை ஏற்று, அவரது ராஜபாளையம் வீட்டுக்கு போயிருக்காருங்க...''அவருடன் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சில நிர்வாகிகளும் போயிருந்தாங்க... எல்லாருக்கும் கோபால்சாமி, இரவு தடபுடலான சைவ விருந்து குடுத்திருக்காருங்க...''டின்னர் சாப்பிட்டபடியே, தென் மாவட்டங்கள்ல கணிசமா வசிக்கக்கூடிய முக்குலத்தோர், நாடார், தேவேந்திர குல வேளாளர் மற்றும் நாயுடு சமூகத்தினர், ஓட்டுகளை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வளைக்கிறது சம்பந்தமா, தீவிரமா ஆலோசனையும் நடத்தியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''குற்றச்சாட்டுல சிக்கியவரையே விசாரிக்க சொன்னா எப்படி வே...'' என கேட்ட பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், போன ஜூன் 29ம் தேதி ரெண்டு பேர், பெண் நோயாளிகள் வார்டுக்கு போய், துண்டு பிரசுரங்களை வழங்கி மத பிரசாரம் செஞ்சிருக்காவ... இந்த வீடியோ சமூக வலைதளங்கள்ல வெளியாச்சு வே...''இது சம்பந்தமா, 'மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்'னு சமூக ஆர்வலர் ராஜேஷ்கண்ணா என்பவர் சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு புகார் அனுப்பினாரு... இணை இயக்குநர், மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்துல, 'இந்த புகார் சம்பந்தமா விசாரணை நடத்தி, அறிக்கை குடுங்க'ன்னு கேட்டிருக்காரு வே...''குற்றம் சாட்டப்பட்ட கண்காணிப்பாளர் கிட்டயே அந்த புகாரைக் கொடுத்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாங்கன்னு இணை இயக்குநர் கேட்டிருக்காரு பாருங்க... அரசு நிர்வாகம் எப்படி இயங்குது பாரும் வே...'' என்றார், அண்ணாச்சி.''அரசு நிலத்தை ஆக்கிரமிச்சு மசூதி கட்டுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''கோவை, உக்கடம் கழிவுநீர் பண்ணை வளாகத்துல, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியிருக்காங்க... இந்த வளாகத்துலயே மசூதி கட்டுறதுக்கு, 7.5 சென்ட் நிலத்தை வாய்மொழி உத்தரவா ஒதுக்கியிருக்காங்க பா...''இதுல, முதல் கட்டமா, கூடாரம் அமைச்சு மசூதி செயல்படுது... அதுக்கு பின்னாடி, 20 சென்ட் நிலத்தை ஆக்கிரமிச்சு, மசூதி கட்டுமான பணிகளை செய்றாங்க... இது பத்தி புகார்கள் போயும், மாவட்ட நிர்வாகம் கண்டுக்கல பா...''இதே வளாகத்துல, 17ம் நம்பர் பிளாக்குல மூணு வீடுகள்ல, 'மதரசா' பள்ளிகள் செயல்படுது... 'ஏழை மக்கள் குடியிருக்க கட்டிய வீடுகள்ல, மதரசா பள்ளி களுக்கு யார் அனுமதி குடுத்தாங்க'ன்னு சர்ச்சை எழுந்திருக்கு... நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அலட்சியமா செயல்படுறதாகவும் புகார்கள் எழுந்திருக்குது பா...'' என முடித்தார், அன்வர்பாய்.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பா மாதவன்
ஜூலை 18, 2025 06:04

இதற்கு பதிலடியாக, ஹிந்துக்களும் பிள்ளையார் கோவில் கட்ட ஆரம்பித்தால், அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். பிள்ளையார் கோவில் கட்டக் கூடாது என்று. மக்களுக்கு விழிப்புணர்வு வராத வரை, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளுக்கு பயம் இருக்காது.


N Sasikumar Yadhav
ஜூலை 17, 2025 23:14

இஸ்லாமியர்களின் ஓட்டுப்பிச்சைக்காக எதையும் கண்டுகொள்ள மாட்டானுக இந்த மானங்கெட்ட திராவிட மாடல் கும்பலுங்க


Balaa
ஜூலை 17, 2025 17:39

சென்னை சைதாப்பேட்டையில் இதே மாதிரி குடியிருப்பு வளாகத்தில் மசூதி இருக்கிறது. அனுமதி தந்த யார் அந்த சார்.


D.Ambujavalli
ஜூலை 17, 2025 16:55

சிறுபான்மையினர் என்ன செய்தாலும் அரசுக்கு கண்ணும தெரியாது, முறையிட்டால் காதும் கேட்காது


sankaranarayanan
ஜூலை 17, 2025 11:19

20 சென்ட் நிலத்தை ஆக்கிரமிச்சு, மசூதி கட்டுமான பணிகளை செய்றாங்க... இது பத்தி புகார்கள் போயும், மாவட்ட நிர்வாகம் கண்டுக்கல ...இதே வளாகத்துல, 17ம் நம்பர் பிளாக்குல மூணு வீடுகள்ல, மதரசா பள்ளிகள் செயல்படுது... ஏழை மக்கள் குடியிருக்க கட்டிய வீடுகள்ல, மதரசா பள்ளி களுக்கு யார் அனுமதி குடுத்தாங்கன்னு சர்ச்சை எழுந்திருக்கு. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அலுவலகம் கண்டுக்கவே இல்லை யாரிடம் சென்று அழுவதே என்றே மக்களுக்கு தெரியவில்லை கட்டிய கோயில்களை இடிக்கும் இந்த இந்து அறநிலைத்துறை அமைச்சர் இதை கண்டுகொள்ளவே இல்லை


AMMAN EARTH MOVERS
ஜூலை 17, 2025 09:21

அரசு நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு கோவில்கள் அனைத்தையும் இந்த விடியா அரசு அப்புறப்படுத்தவேண்டும்


N Sasikumar Yadhav
ஜூலை 17, 2025 23:19

கோயில் இடத்தைதான் அரசாங்கம் ஆக்கிரமித்திருக்கிறது . இந்துமத கோயில் இடங்களை ஏறக்குறைய 60 சதவீத இடங்களை அரசும் அந்நிய பாலைவன மதத்தான்களும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் கும்பகோணத்தில் ஒரு இஸ்லாமியன் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்திருந்து இப்போதுதான் மீட்டிருக்கு இந்துமத துரோக திமுக தலைமையிலான குன்றிய விடியாத அரசு


SRIDHAAR.R
ஜூலை 17, 2025 08:01

இந்துக்களே, யாரையும் அரசாங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய விடாதே


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2025 04:22

இதுதான் ஸ்டாலின் அரசின் லட்சணம்


முக்கிய வீடியோ