உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மது விற்பனை செய்த அ.தி.மு.க., பிரமுகர் காப்பாற்ற தி.மு.க., செயலர் பரிந்துரை?

மது விற்பனை செய்த அ.தி.மு.க., பிரமுகர் காப்பாற்ற தி.மு.க., செயலர் பரிந்துரை?

பள்ளிப்பாளையம், ஆவாரங்காடு பகுதியில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து போலீசில் மாட்டிய, அ,தி.மு.க., பிரமுகரை விட சொல்லி, தி.மு.க., நகர செயலர் போலீஸ் ஸ்டேஷன் வந்ததால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஆவாரங்காடு குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக இரவு, பகலாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை பள்ளிப்பாளையம் போலீசார், இப்பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அய்யனார், 34, செல்வகுமார், 40, என இருவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் அய்யனார், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தனர்.அப்போது பள்ளிப்பாளையம் நகர தி.மு.க., செயலர் குமார், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வந்து, கைது செய்யப்பட்டவர்களை விட சொல்லி போலீசிடம் வலியுறுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரையும், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வெளியே வரும் போது, நகர செயலர் பின்னால் செல்ல அய்யனார் முற்பட்ட போது, போலீசார் இழுத்து சென்றனர். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர், வீடியோ எடுத்துள்ளார். அது நேற்று மாலை முதல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.இது குறித்து, பள்ளிப்பாளையம் நகர தி.மு.க., செயலர் குமார் கூறுகையில்,''நான் வேறு வேலையாக பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். அந்த சமயத்தில் போன் வந்ததால், வெளியே நின்று மொபைலில் பேசி கொண்டு இருந்தேன். அப்போது கைது செய்யப்பட்டவர்களை அழைத்து சென்றுள்ளனர். இதை வீடியோ எடுத்து சமுக வலைதளத்தில் வெளியிடுள்ளனர். நான் போலீசிடம் பரிந்துரை செய்ததை நிரூபித்தால் பதவி விலக தயார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை