உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / டூ - வீலரில் சென்ற மூதாட்டி சரக்கு வேன் மோதி உயிரிழப்பு

டூ - வீலரில் சென்ற மூதாட்டி சரக்கு வேன் மோதி உயிரிழப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், மணியாட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மனைவி கெங்கையம்மாள், 72. இவர், தன் மகள் சாந்தி, மருமகன் ராமகிருஷ்ணன் என, மூவரும், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், நேற்று, மாலை 4:00 மணியளவில், அரக்கோணம் சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.இருசக்கர வாகனத்தை மருமகன் ராமகிருஷ்ணன் ஓட்டி சென்றார். அப்போது, பின்னாள் வந்த சரக்கு வேன், இருசக்கர வாகனம் மீது மோதியதில், மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.பலத்த காயமடைந்த கெங்கையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் காயத்துடன் உயர் தப்பினர். இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்து பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை