உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  செயல்படாத போக்குவரத்து சிக்னல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

 செயல்படாத போக்குவரத்து சிக்னல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

வெங்கத்துார்: திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் செயல்படாத தானியங்கி போக்குவரத்து சிக்னலால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வெங்கத்துார் ஊராட்சி. திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், மணவாளநகர் அருகே வெங்கத்துார் ஊராட்சிக்கு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் உள்ள தானியங்கி போக்குவரத்து சிக்னல், சில மாதங்களாக பழுதடைந்து இயங்காமல் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானியங்கி போக்குவரத்து சிக்னலை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ