உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பொது - சிறையில் பிளேடு விழுங்கி கைதி தற்கொலை முயற்சி

பொது - சிறையில் பிளேடு விழுங்கி கைதி தற்கொலை முயற்சி

புழல் :மாதவரம் அடுத்த மாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் செபாஸ்டின் டேனியல், 24. குட்கா விற்ற வழக்கில், எழும்பூர் போலீசார் இவரை கைது செய்து, சில தினங்களுக்கு முன், புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், இவர் காதலித்து வந்த பெண்ணின் பெற்றோர், செபாஸ்டின் டேனியலின் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தன் மகளை காதலிப்பதை செபாஸ்டின் டேனியல் கைவிட வேண்டும் என கூறியுள்ளனர்.இத்தகவல், செபாஸ்டின் டேனியலுக்கு தெரிய வந்ததை அடுத்து, நேற்று முன்தினம், சிறையின் சமையலறைக்கு சென்று, அங்கு கிடந்த பிளேடால் தன் வயிறு, கழுத்து பகுதியில் கிழித்துக்கொண்டார். மேலும், பிளேடை உடைத்து விழுங்கி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.சிறை போலீசார், செபாஸ்டின் டேனியலை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ