உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் சீனியர்!

பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் சீனியர்!

“ஏகப்பட்ட தில்லுமுல்லு செய்தவர், தன் துறையில முக்கிய புள்ளிக்கு உதவியாளரா போயிட்டாரு பா...” என்றபடியே பெஞ்சில் இடம் பிடித்தார், அன்வர்பாய்.“புதிர் போடாம விஷயத்துக்கு வாரும் ஓய்...” என்றார்,குப்பண்ணா.“திருநெல்வேலி மாநகராட்சியில இருந்தபெரிய அதிகாரி, வசூல்லபுகுந்து விளையாடினாரு...இவர் மேல, ஏகப்பட்ட புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு போனது பா...“என்னைக்காவது ஒருநாள் கையும், களவுமா சிக்குவார்னு மாநகராட்சி ஊழியர்கள் எதிர்பார்த்த சூழல்ல, எந்த பிரச்னையும் இல்லாம போன மாசம், 'ரிட்டயர்' ஆகிட்டாரு... இப்ப, என்னடான்னா தன் துறையின் முக்கிய புள்ளிக்கே உதவியாளராபோயிட்டாரு பா...“ஏன்னா, அதிகாரியின்பெண் உறவினர், திருச்சிபக்கத்துல போலீஸ் அதிகாரியா இருக்காங்க...அவங்க வழியா, துறையின் முக்கிய புள்ளியை பிடிச்சுட்டாரு பா...“முக்கிய புள்ளியும்,நெல்லையில புதுசா திறக்கபோற தன் அலுவலகத்துக்கு அதிகாரியை உதவியாளரா நியமிச்சுட்டாரு... இதுக்கு ரெண்டு காரணம் பா...“முதலாவது, முக்கிய புள்ளியும், அதிகாரியும் ஒரே சமுதாயம்... அதுவும் இல்லாம, துறையில எப்படி எல்லாம், 'கட்டிங்' போடலாம் என்ற சூட்சுமத்தை அதிகாரி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிறது ரெண்டாவது காரணம் பா...” என்றார், அன்வர்பாய்.“விலைவாசி எல்லாம்ஏறிட்டதால, கமிஷனையும்ஏத்திண்டார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...“மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குனர் நிலையில இருக்கறவர், ஊராட்சிகளுக்கு போய் ஆண்டு கணக்கு, வழக்குகளை தணிக்கை செய்து, ஒப்புதல்தரணும்... பொதுவா, ஆண்டு தணிக்கைக்கு யார்வந்தாலும், ஊராட்சிகள்சார்புல, 10,000 ரூபாயைகாணிக்கையா எடுத்து வச்சுடணும்கறது எழுதப்படாத சட்டம் ஓய்...“இல்லாட்டி, கணக்கு,வழக்குல குளறுபடின்னுபைல்ல எழுதிட்டு, வருஷக் கணக்குல நடக்கவச்சுடுவா... இந்த சூழல்ல,'டாலர் சிட்டி' மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி, தணிக்கைக்கு போனா, ஒரு பஞ்சாயத்துக்கு, 30,000 ரூபாய் கேக்கறார்...'தடாலடியா கமிஷனை மூணு மடங்கு உசத்தினா,நாங்க என்ன பண்றது'ன்னுஊராட்சி தலைவர்களும்,செயலர்களும் புலம்பறாஓய்...” என்றார், குப்பண்ணா.“அ.தி.மு.க., சீனியர் ரொம்பவே அதிருப்தியிலஇருக்காருங்க...” என்றார்,அந்தோணிசாமி.“யாருவே அது...” எனகேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.“அ.தி.மு.க.,வுல கிளை,வார்டு, வட்டம் வாரியா கள ஆய்வு செய்யவும், கட்சி பணிகளை விரைவுபடுத்தவும் கள ஆய்வு குழுவை பழனிசாமி அறிவிச்சிருக்காரே... இதுல, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி,வேலுமணி, ஜெயகுமார்,சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, வரகூர் அருணாசலம் ஆகியோருக்கு இடம் தந்திருக்காருங்க...“ஆனா, கட்சியிலயும்,குறிப்பா கொங்கு மண்டலத்தில் ரொம்பவே சீனியரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இதுல இடம் தரல... 'பழனிசாமி மீதுஅதிருப்தியில இருக்கிற கொங்கு அமைச்சர்களுக்குதர்ற முக்கியத்துவத்தை கூட, கட்சிக்கும்,தலைமைக்கும் எப்பவும்விசுவாசமா இருக்கும் செங்கோட்டையனுக்கு தரல'ன்னு, அவரது ஆதரவாளர்கள் மனம் குமுறிட்டு இருக்காங்க...”என முடித்தார், அந்தோணிசாமி.பெரியவர்கள் கிளம்ப,பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 12, 2024 17:45

அதிருப்தி முன்னாள்களை தன்னைக்கட்டிக்கொள்ளாவிட்டால் தேர்தலில் வருவார்களோ, இன்னொரு செ பா ஆகிவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு செங்கோட்டையனெல்லாம் எதிர்க்கும் வகையில் சேராத 'மிதவாதி' என்பதால்தான் அவரிடம் இந்த அலட்சியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை