மேலும் செய்திகள்
சுற்றுசுவர் வசதி இல்லாத உள்ளாவூர் அரசு பள்ளி
12-Dec-2024
உத்திரமேரூர், உத்திரமேரூர் கல்வி வட்டார எல்லைக்குஉட்பட்ட வாடாநல்லூர் கிராமத்தில், அரசு நடு நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.இங்குள்ள பள்ளிவளாகம் முறையாகபராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.இதனால், பாம்புஉள்ளிட்ட விஷ ஜந்துக்கள், அடிக்கடி பள்ளி வளாகத்திற்குள் நடமாடுகிறது.இதனால், மாணவ - மாணவியர் தினந்தோறும் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும், வளாகத்தில் உணவு கழிவுகள் மற்றும்குப்பை கழிவுகள்கொட்டப்பட்டு வருகிறது.இதிலிருந்து, தொற்றுநோய் பரப்பும் கொசு உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பள்ளி வளாகத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து, செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12-Dec-2024