உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / 22 குழந்தைகள் மரணத்துக்கு காரணமானவர்... கைது தரமற்ற இருமல் மருந்து தயாரித்து விநியோகித்தவர்

22 குழந்தைகள் மரணத்துக்கு காரணமானவர்... கைது தரமற்ற இருமல் மருந்து தயாரித்து விநியோகித்தவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை :இருமல் மருந்து குடித்து, 22 குழந்தைகள் பலியான விவகாரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் உட்பட மூன்று பேரை, மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு குழு போலீசார், சென்னை அசோக் நகரில் நேற்று கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த ஆகஸ்டில், 'கோல்ட்ரிப்' என்ற இருமல் மருந்து குடித்த குழந்தை ஒன்று பலியானது. இக்குழந்தைக்கு டாக்டர்களின் பரிந்துரையின்படியே இருமல் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ரசாயனம் எனினும், அடுத்தடுத்து இதே இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தன. நேற்று மேலும் இரு குழந்தைகள் உயிரிழந்தன. பிரேத பரிசோதனையில் குழந்தைகளின் சிறுநீரகங்களில், 'டை எதிலீன் கிளைக்கால்' என்ற ரசாயனம் படிந்திருப்பது தெரியவந்தது; இது, விஷத்தன்மை உடையது. சிறுநீரகங்களில் படிந்து, அதை செயலிழக்கச் செய்யும் தன்மை உடையது . அதனால், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், நச்சுத்தன்மை உள்ள ரசாயன பொருட்கள் கலந்திருப்பதை கண்டறிந்தனர். இந்த இருமல் மருந்து, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த, 'ஸ்ரீசன் பார்மா' என்ற மருந்து கம்பெனியில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ம.பி., மாநில போலீசார், ஸ்ரீசன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தனர். குழந்தைகளின் உயிர்பலிக்கு காரணமான நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழு போலீசார், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் வந்தனர். சம்பந்தப்பட்ட கம்பெனி செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்; ஆனால், பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, சென்னை அசோக் நகரில் வசித்து வரும் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், 75, அவரது நிறுவனத்தின் மேலாளர் ஜெயராமன், ஆய்வக உதவியாளர் மகேஸ்வரி ஆகியோரை நேற்று அதிகாலையில் கைது செய்தனர். இந்த இருமல் மருந்து குடித்து, மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; அதுபற்றியும் விசாரணை நடக்கிறது. 48.6 சதவீதம் நச்சு 'கோல்ட்ரிப்' மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில், 'டை எதிலீன் கிளைக்கால்' என்ற நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருள் 48.6 சதவீதம் கலந்திருப்பது“இந்த அளவுக்கு அதிகமான டை எதிலீன் கிளைக்கால் கலப்பு என்பது மிகவும் ஆபத்தானது,” என, தமிழக முன்னாள் மருந்து தர ஆய்வாளர் சிவபாலன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'கோல்ட்ரிப்' என்பது, காய்ச்சல் மற்றும் இருமலுக்கான மருந்து. இதிலுள்ள பாரசிட்டமால், தண்ணீரில் முழுதும் கரையாது; மிக குறைந்த அளவே கரையும். இது கரைவதற்கு, 'புரோப்பிலின் கிளைக்கால்' சேர்க்க வேண்டும். அப்போது தான், 'சிரப்' உருவாக்க முடியும். இந்த புரோப்பிலின் கிளைக்காலில், டை எதிலீன் கிளைக்கால் எனும் துாய்மையற்ற வேதிப்பொருள் உள்ளது. இது மருந்துகளில், 0.1 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், கோல்ட்ரிப் மருந்தில், 48.6 சதவீதம் இருந்திருக்கிறது. இதுதான், மருந்தை நச்சுதன்மையாக மாற்றி, உடல்நலத்தை பாதித்துள்ளது. இந்த மருந்தை தயாரித்த நிறுவனம், தயாரிப்புக்கு முன், தயாரிப்பின் போது, அதன்பின் என, மூன்று நிலைகளில் தரத்தை ஆய்வு செய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வு செய்யாத 2 பேர் 'சஸ்பெண்ட்' தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிர மணியன் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில், இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து தமிழகத்துக்கு தகவல் கிடைத்தவுடன், உடனடியாக மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 'கோல்ட்ரிப்' மருந்தில் நச்சுத்தன்மை அதிகளவு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசும், மத்திய பிரதேச மாநில அரசும், இந்த மருந்தில் நச்சுத்தன்மை இல்லை என்று தெரிவித்தன. இருப்பினும், நாம் தான் இந்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மை உள்ளது என கண்டறிந்து, உடனடியாக அதன் உற்பத்தியை நிறுத்தினோம்; ஆலையை மூடவும் உத்தரவிட்டுள்ளோம். இந்த விவகாரம் குறித்து, மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம், மருந்தில் நச்சுத்தன்மை பொருள் கலப்பு குறித்து விசாரிக்கப்படும். தற்போது, மருந்து நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும். அதேநேரம், குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்தின் தரத்தை ஆய்வு செய்யவில்லை என்பதற்காக, மூத்த மருந்து தர ஆய்வாளர்கள் இரண்டு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இரு குழந்தைகள் உயிரிழப்பு ம.பி.,யின் சிந்த்வாரா மாவட்டத்தில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குடித்து, ஏற்கனவே, 20 குழந்தைகள் இறந்த நிலையில், மேலும் இரண்டு குழந்தைகள் சிறுநீரக தொற்றால் நேற்று உயிரிழந்தன. மஹாராஷ்டிராவின் நாக்பூரில் சிகிச்சை பெற்று வந்த விஷால், 5, மயங்க் சூர்யவன்ஷி, 4, என்ற இரு குழந்தைகள் உயிரிழந்ததால், இறப்பு, 22 ஆக அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: ராஜஸ்தான் மற்றும் ம.பி.,யில், கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், மருந்து பாதுகாப்பு வழிமுறைகளை மறுசீராய்வு செய்ய வேண்டும். இதை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இன்று விசாரிக்கிறது. உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் உலக சுகாதார அமைப்புக்கு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு எழுதியுள்ள கடிதம்: 'கோல்ட்ரிப், ரீலைப், ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர்' என்ற மூன்று இருமல் மருந்துகள், விற்பனையில் இருந்து உடனடியாக திரும்பப் பெறப்பட்டு உள்ளன. அவற்றின் உற்பத்தியை நிறுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து, இந்த இருமல் மருந்துகள் எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அசோகன்
அக் 10, 2025 15:16

திமுக தொடர்புடைய கம்பெனி என்பதால் indi கூட்டணியும் ஊடகங்களும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்...... இதுவே பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் பிணங்களை தூக்கிக்கொண்டு இந்தியாவையே புரட்டி போட்டிருப்பார்கள்


Natchimuthu Chithiraisamy
அக் 10, 2025 13:05

22 பேர் என்று உறுதியாக என்று எப்படி சொல்ல முடியும். முதலில் சன் நிறுவனத்தின் சேல்ஸ் டீடெயில்ஸ் பெறவேண்டும் பில் இல்லாமல் அனுப்பியதையும் சேர்த்து அந்த ஊர்களில் நகரங்களில் விசாரியுங்கள் இறந்தது எத்தனை என்பது தெரியும். எல்லாமே விஷம் 22 பாட்டில் மட்டும் அல்ல. சுப்ப்ரிம் கோர்ட் சாவை ஒத்துக்கொள்ளாது வாங்கியவன் கலப்படம் செய்துப்பான் கேஸ் நிக்க்காது. பக்கத்துக்கு விட்டு குழந்தையும் அம்மாவையும் கொன்றவனை விடுதலை செய்துள்ளது.


ஆரூர் ரங்
அக் 10, 2025 13:00

தகுதியற்ற நபர்களை LABல் வேலைக்கு வைத்திருந்தால் பொறுப்பற்ற முறையில் மருந்தை சோதனை செய்து ரிப்போர்ட் கொடுத்திருப்பார்கள். வேலைசெய்பவர்கள் தகுதி பெற்றவர்களா என கண்காணிக்க வேண்டியது மாநில மருந்து கட்டுப்பாடு துறையின் பொறுப்பு. ஆனால் அங்கெல்லாம் ஒவ்வொரு டிரான்ஸ்பர், பதவியுயர்வுக்கும் பெரிய பெட்டி.


தியாகு
அக் 10, 2025 11:25

கட்டுமர திருட்டு திமுகவினருக்கு லஞ்சம் கொடுத்தால் போதும் கழிவு நீரை கூட பாட்டிலில் அடைத்து மருந்து என்று விற்றுவிடலாம். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


visu
அக் 10, 2025 10:42

கைது செய்ய வேண்டியது நிறுவன தர ஆய்வாளருதான் அரசு ஆய்வாளர்கள் அனுமதி வழங்கும்போது பார்ப்பதை தவிர்த்து வேறெப்போதும் சோதிப்பதாக தெரியவில்லை . இதை தெரிந்தே செய்திருக்க வாய்ப்பில்லை தர ஆய்வாளர் வேலையை சரிவர செய்யாததால் ஏற்பட்ட பிரசினை பின்விளைவுகள் உரிமையாளருக்கு தெரியாமல் இருக்குமா


RAMAKRISHNAN NATESAN
அக் 10, 2025 09:40

எந்த கழக ஆட்சியில் உரிமம் வழங்கப்பட்டது ? இதைத் தவிர இன்னும் சுமார் முப்பது மருந்துகளைத் தயாரிக்கிறது அந்நிறுவனம் ....


ஆரூர் ரங்
அக் 10, 2025 10:56

ஆளும் கழகத்திற்கு இவ்வளவு தைரியமா தரக்குறைவான மருந்து தயா‌ரித்திருக்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் CBI விசாரணை கட்டாயம் தேவை.


angbu ganesh
அக் 10, 2025 09:25

41, 22 இப்படியே ஆனா அரசு கை கட்டி வாய் மூடி ஆதாயம் தேடும் உண்மை நிரூபிக்க பட்டாள் உடன் தூக்கில் இடனும் கருணை காட்ட கூடாது


vbs manian
அக் 10, 2025 09:15

அமைச்சருக்கு தார்மிக பொறுப்பு இல்லையா.


vbs manian
அக் 10, 2025 09:10

இதிலும் தாங்கள் எதுவும் தவறு செய்யவில்லை என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. இவ்வளவு நாட்கள் எப்படி அந்த நிறுவனம் இயங்கியது. நிறுவனம் குழந்தைகள் உயிரோடு விளையாடி விட்டது. மன்னிக்கமுடியாத செயல். இருமலுக்கு சித்தரத்தை மஞ்சள் அதிமதுரம் துளசி கலந்த பாட்டி கஷாயம் இன்றும் இருமலுக்கு கை கண்டா மருந்து.


தமிழன்
அக் 10, 2025 09:09

அதுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிய தான முதல்ல கைது பண்ணனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை