உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வி.சி., கம்பம் அகற்றம்

வி.சி., கம்பம் அகற்றம்

சென்னை, நுங்கம்பாக்கம், மூர்ஸ் சாலை - கல்லுாரி சாலை சந்திப்பில் வி.சி., மாவட்ட அமைப்பாளர் மணி, 38, வட்ட செயலர் அன்பு ஆகியோர், அனுமதியின்றி கட்சி கொடி கம்பம் அமைக்கும் பணியில் நேற்று அதிகாலை ஈடுபட்டிருந்தனர்.இதை பார்த்த ஆயிரம்விளக்கு சட்டம் -- ஒழுங்கு ஆய்வாளர், அனுமதி பெற்று கொடி கம்பம் அமைக்க கூறியுள்ளார். பின்,சம்பந்தப்பட்ட இடம், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், அதன் ஆய்வாளர்கருணாகரன், தன் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தின் அடித்தளத்தை அகற்றும்படி, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.அதன்படி நேற்று காலை, மாநகராட்சி அதிகாரிகள், கொடி கம்பம் அமைப்பதற்காக கட்டப்பட்ட அடித்தளத்தை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை