மேலும் செய்திகள்
மாகாளியம்மன் கோவில் விழா
30-Oct-2025
பல்லடம்: பல்லடம் அடுத்த சித்தம்பலம், எஸ்.ஏ.பி., சேரன் மாநகரில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலின், இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. முன்னதாக, அக். 31 அன்று, உடுமலை திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மறுநாள், மேள தாள வாத்தியங்களுடன், முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. நவ. 1 அன்று திருவிளக்கு வழிபாடு, விநாயகர் பூஜை, 108 சங்கு பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக, லட்சுமி குபேர ஹோமம், சுதர்சன மற்றும் தன்வந்திரி ஹோமம் ஆகியவை நடந்தன. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பவளக்கொடி கும்மியாட்டம் ஆகியவை நடந்தன. அர்ச்சகர்கள் கணேஷ் அய்யர், பாபு சுஜித் சிவம், சவுந்தர் சிவம் ஆகியோர் ஆண்டு விழாவை நடத்தி வைத்தனர். விழா குழு சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
30-Oct-2025