மீண்டும் பசுப்பாதுகாப்பு இயக்கம்
பசுப்பாதுகாப்பை வன்முறையில்லாமல் அகிம்சை முறையில் நடத்தியவர் என்ற பெருமை வினோபா பாவேக்கு உண்டு. காந்தஜி கூறிய 18 நிர்மாணத் திட்டங்களின் பட்டியலில் கூடுதலாக பசுப் பாதுகாப்பினை வினோபா பாவே சேர்த்தார். பசுப்பாதுகாப்பு இயக்கத்தினை வினோபாபாவே மகாராஷ்டிராவில் வார்தாவில் தொடங்கினார். இதன் தலைமையகம் 'கோபுரி' என பசுவைச் சிறப்பிக்கும் பெயரில் உள்ளது. இங்கு பகவத்கீதைக்கு என ஒரு கோயில் 'கீதாயி மந்திர்' உள்ளது. இந்தக் கோயில் பசு வடிவத்தில் உள்ளது.